Elon Meet with Father: 7 ஆண்டுகளுக்கு பின் சந்தித்துக்கொண்ட அப்பா - மகன்: எலான் மஸ்க் - எர்ரோல் மஸ்க் நேரில் சந்திப்பு.! ஆனந்தக்கண்ணீரில் குடும்பத்தினர்.!
உலகம் போற்றும் செல்வந்தராக இருந்தாலும், தனது குடும்பத்திற்கு என நேரம் ஒதுக்கும் ஒவ்வொருவரும் குடும்ப அன்பை பெற நினைக்கும் பாக்யசாலிகளே ஆவார்கள்.
நவம்பர் 25, சான்பிரான்சிஸ்கோ (Technology News): டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உட்பட பல நிறுவனங்களுக்கு சொந்தக்காரர் எலான் மஸ்க் (Elon Musk). இவர் உலக செல்வந்தர்களில் ஒருவராவார். இவரின் தந்தை எர்ரோல் மஸ்க் (Errol Musk). கடந்த 2016ம் தந்தையும் - மகனும் இறுதியாக நேரில் சந்தித்துக்கொண்ட நிலையில், தற்போது மீண்டும் 7 ஆண்டுகள் கழித்து ஒருவரையொருவர் சந்தித்துக்கொண்டன.
சனிக்கிழமையன்று எர்ரோல் (வயது 77) மற்றும் அவரின் குடும்பத்தினர், ஸ்டார்ஷிப் ஏவுதளத்தில் செயற்கைகோள் ஏவுதலை நேரில் கண்டுகளித்தனர். அதனைத்தொடர்ந்து, எலானுடன் டெக்ஸஸ் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. Girl Died Falling Manhole: பாதாள சாக்கடையில் விழுந்து 2 வயது சிறுமி பரிதாப பலி.!
அப்போது, எலான் மஸ்க் தனது குழந்தைகளுடனும் நேரத்தை செலவிட்டார். குழந்தைகளை நீண்ட நாட்கள் கழித்து நேரில் சந்தித்து வியந்துபோன எலான், தனது தந்தையை 7 ஆண்டுகள் கழித்து சந்தித்தார். இதனால் அவரின் குடும்பத்தினர் ஆனந்தக்கண்ணீருக்கு உள்ளாகினர்.
கடந்த 2016ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் வைத்து தந்தையும் - மகனும், எர்ரோலின் 70வது திருமணத்தில் சந்தித்துக்கொண்டன. அதனைத்தொடர்ந்து தற்போது மீண்டும் சந்தித்தது அவரின் குடும்பத்தினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.