Austin Gun Fire: அமெரிக்காவில் மீண்டும் பயங்கரம்.. வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிசூட்டில் 2 பேர் பரிதாப பலி.!
அவ்வப்போது தனது சுய மனநிலையை இழக்கும் நபர்கள், அமெரிக்காவில் மக்கள் அதிகம் கூடும் உணவகங்கள், வணிக வளாகங்களில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
செப்டம்பர் 01, டெக்ஸாஸ் (World News): அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் என்பது மேலோங்கி இருக்கும் நிலையில், இனரீதியிலான தாக்குதல்கள் நடைபெறுகின்றன. வெள்ளை இனத்தவர் - கருப்பு இனத்தவர் என நிற பாகுபாடு அங்கு நிலவி வருவதால், பல மோதல் சம்பவங்கள் மற்றும் துப்பாக்கிசூடு போன்ற தாக்குதல் சம்பவங்களும் அதிகரித்து இருக்கின்றன.
அவ்வப்போது தனது சுய மனநிலையை இழக்கும் இவர்கள், மக்கள் அதிகம் கூடும் உணவகங்கள், வணிக வளாகங்களில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிசூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். கொலையாளி தீவிர வெள்ளை நிற இன பற்றாளராக இருந்ததும் விசாரணையில் அம்பலமானது. Wife Killed Husband: மதுபோதையில் தினமும் தகராறு; ஆத்திரத்தில் அனாதையான 4 பிள்ளைகள்.. வீடெல்லாம் இரத்த வெள்ளத்தில் பயங்கரம்.!
இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணம், ஆஸ்டின் நகரில் இருக்கும் Arboretum வணிக வளாகத்தில் துப்பாக்கிசூடு தாக்குதல் நடந்துள்ளது. இந்த துப்பாக்கிசூடு சம்பவத்தில் 2 பேர் பரிதாபமாக பலியாகி இருக்கின்றனர். தகவல் அறிந்து சென்ற காவல் துறையினர், துப்பாக்கிசூடு நடத்தியவரை சுட்டுக்கொன்று மக்களை பாதுகாத்தனர்.