Private Plane Crash: பிரேசில் நாட்டில் தனியார் விமானம் விழுந்து விபத்து; 2 பேர் பலி..!

பிரேசில் நாட்டில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று தரையிறங்க முயன்ற போது, எதிர்பாராதவிதமாக விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

Brazil Private Plane (Photo Credit: @OnDisasters X)

ஜூன் 05, சாவ் பாலோ (World News): பிரேசில் நாட்டில் சான்டா கேட்டரினா மாநிலத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான சிறிய ரக விமானம் (Plane) ஒன்று விபத்து ஏற்பட்டது. நேற்று முன்தினம் மாலை மினாஸ் ஜெராயிஸ் மாநிலம், கவர்னடார் வாலடேர்ஸ் நகரில் இருந்து புறப்பட்டு, புளோரியானோபொலிஸ் நகர் பகுதி நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, இடபோவா நகர் அருகே சென்ற போது, விமானத்தை தரையிறக்க அவசரமாக தகவல் பெறப்பட்டது. Top 5 Fast Charging Smart Phones: அதிவேகமாக சார்ஜ் ஆக கூடிய ஸ்மார்ட் போன்கள்..! முழு விவரம் இதோ..!

ஆனால், விமானத்தை தரையிறக்க முயற்சித்த போது, விமான நிலையத்தை தாண்டி மரங்கள் அடர்ந்த காட்டு பகுதிக்குள் சென்று விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் சென்ற 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். இதனையடுத்து, தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக, விமானத்தில் ஏதேனும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதா? அல்லது வேறு காரணம் ஏதும் உள்ளனவா? என்று தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், விமானம் அவசரமாக தரையிறக்க முயற்சித்த காரணம் என்ன? என்றும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.