ஜூன் 05, சென்னை (Technology News): இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் ஸ்மார்ட்போன்கள் விரைவாக சார்ஜ் (Fast Charging) ஆக வேண்டும் என்றே விரும்புகின்றனர். அந்த வகையில், எந்தெந்த ஸ்மார்ட்போன்கள் மிகவும் விரைவாக சில நிமிடங்களில் வேகமாக சார்ஜ் ஆகின்றன என்பதனை பற்றி இதில் பார்ப்போம்.
IQOO Neo 9 Pro: இந்த ஸ்மார்ட் போன், ரூ.34,999 விலையில் கிடைக்கக்கூடியதில், 5160mAh பேட்டரி திறன் கொண்ட மற்றும் 129W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வசதியுடன் கிடைக்கின்றது. மேலும், 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் 6.78 Inch LTPO AMOLED display கொடுக்கப்பட்டுள்ளது. இதில், சக்தி வாய்ந்த செயல்திறன் மற்றும் திடமான கேமரா அமைப்பு உள்ளது. Red Banana Benefits: செவ்வாழைப் பழத்தில் உள்ள நன்மைகள் என்னென்ன..? விவரம் உள்ளே..!
Motorola Edge 50 Pro: ரூ. 35,999 விலைக்கு கிடைக்கும் இந்த ஸ்மார்ட் போனில், 125W Turbo Power பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வசதியுடன் கிடைக்கிறது. இது 12GB RAM மற்றும் 256 GB Storage Variant-யில் உள்ளது. மேலும், 6.7 Inch 1.5 POLED கர்வ் டிஸ்ப்ளே மற்றும் 144 ஹெர்ட்ஸ் மதிப்பீட்டைக் கொண்டுள்ளது.
Redmi Note 13 Pro+: இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.30,999 ஆகும். இதில் 8GB RAM ஆதரவுடன், 200MP கேமரா, 3D வளைந்த AMOLED Display மற்றும் 120ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகிதம் உள்ளது. வெறும் 19 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும்.
IQOO Neo 7 Pro 5G: இந்த ஸ்மார்ட்போன் முழுமையாக சார்ஜ் ஏற வெறும் 25 நிமிடங்கள் மட்டுமே ஆகும். இதன் விலை ரூ.29,000 ஆகும். 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் மாடலில் இந்த போன் கிடைக்கின்றது. AMOLED Display உள்ள இந்த ஸ்மார்ட்போனில் சிறப்பான கேமரா மற்றும் சக்திவாய்ந்த செயல்திறன் கொண்டுள்ளது.
IQOO 12: இதில், 120W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட இந்த ஸ்மார்ட் போன் ரூ.52,999 விலையில் கிடைக்கின்றது. மேலும், 12RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் கொண்ட மாடலில் கிடைக்கிறது. 144Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.78 இன்ச், LTPO AMOLED Display உடன் கொடுக்கப்பட்டுள்ளது.