Pakistan Terrorist Attack: பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்; 20 பேர் உயிரிழப்பு.. 7 பேர் படுகாயம்..!
பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதலில் 20 தொழிலாளர்கள் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபர் 11, இஸ்லாமாபாத் (World News): பாகிஸ்தானின் பலுசிஸ்தான் (Balochistan) மாகாணத்தில் உள்ள தனியாருக்குச் சொந்தமான நிலக்கரி சுரங்கத்தில் (Coal Mine) இன்று (அக்டோபர் 11) அதிகாலை நடந்த தாக்குதலில் 20 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர். Hurricane Milton: புளோரிடாவில் கரையை கடந்த மில்டன் புயல்.. பரிதவிக்கும் மக்கள்..!
பலுசிஸ்தானின் டுகி பகுதியில் உள்ள ஒரு சிறிய தனியார் நிலக்கரி சுரங்கத்தில் பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை (Terrorist Attack) நடத்தியதாக டுகி காவல்நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலில் கையெறி குண்டுகள், ராக்கெட் லாஞ்சர்கள் மற்றும் பிற நவீன ஆயுதங்களை குற்றவாளிகள் பயன்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து மாவட்ட நிர்வாகம், காவல்துறையினர் மற்றும் எல்லைப் படை குழுக்கள் ஆகியோர் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். இதுகுறித்த விசாரணையில், பலியானவர்களில் 17 பேர் பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், 3 பேர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள். படுகாயமடைந்தவர்களிலும் 3 பேர் ஆப்கானைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
இஸ்லாமாபாத்தில் வருகின்ற அக்டோபர் 15,16 ஆகிய தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டை நடத்த பாகிஸ்தான் தயாராகி வரும் நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எஸ்சிஓ உச்சிமாநாட்டில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் உயர்மட்ட சீன பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.