Hurricane Milton (Photo Credit: @nexta_tv X)

அக்டோபர் 10, வாஷிங்டன் (World News): அமெரிக்காவில் மில்டன் புயல் உருவான நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியது. புளோரிடாவில் (Florida) கரையை கடந்த புயல் (Storm) அதிகபட்சமாக மணிக்கு 195 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியதாக அமெரிக்க வானிலை மையம் அறிவித்துள்ளது. சூறாவளி பாதித்த பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான கடலோர காவல் படையினர் மற்றும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார். North Koreans Fighting For Russia: ரஷ்யாவுடன் கைகோர்த்த வடகொரியா.. தீவிரமாகும் உக்ரைன் போர்..!

இந்நிலையில், புளோரிடா மாகாணத்தில் சீஸ்டா கீ பகுதி அருகே அந்நாட்டு நேரப்படி நேற்றிரவு (அக்டோபர் 09) 8.30 மணியளவில் மில்டன் சூறாவளி (Hurricane Milton) புயல் கரையை கடந்தது. இதனால், மணிக்கு 195 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதன்பின்னர், மணிக்கு 165 கி.மீ. என்ற அளவில் காற்றின் வேகம் குறைந்தபோதும், அதிக ஆபத்து ஏற்படுத்தும் பிரிவிலேயே மில்டன் வைக்கப்பட்டு உள்ளது. ஆர்லேண்டோவுக்கு தென்மேற்கே 60 மைல்கள் தொலைவில் சூறாவளி மையம் கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இதனால், புளோரிடாவின் அட்லாண்டிக் கடலோரத்தில் செயின்ட் லூசி கவுன்டி பகுதியில் சிலர் உயிரிழந்திருக்கக் கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சூறாவளி தாக்கியதில் நேற்றிரவு 11 மணியளவில் மின்சார தடை ஏற்பட்டது. சூறாவளியால் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புளோரிடாவில் மில்டன் சூறாவளி புயலின் தாக்கம்: