Hanuman Statue: அமெரிக்காவில் 90 அடி உயர அனுமன் சிலை திறப்பு.. 3வது பெரிய சிலை..!
அமெரிக்காவில் 90 அடி உயரத்தில் பிரம்மாண்டமான அனுமன் சிலை திறக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 22, டெக்சாஸ் (World News): அமெரிக்காவின் டெக்சாஸ் (Texas) நகரில் 90 அடி உயரத்தில் பிரம்மாண்ட அனுமன் சிலை (Hanuman Statue)திறக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்காவின் 3-வது உயரமான சிலை என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. நியூயார்க்கில் உள்ள சுதந்திர தேவி சிலை (151 அடி), இதுவே அமெரிக்காவின் முதல் உயரமான சிலை ஆகும். இதற்கு அடுத்ததாக ஃப்ளோரிடாவில் உள்ள டிராகன் சிலை (110 அடி), தற்போது டெக்சாஸ் நகரில் நிறுவப்பட்டுள்ள அனுமன் சிலை (90 அடி) மூன்றாவது உயரமான சிலையாக உள்ளது. இந்த பிரம்மாண்ட அனுமன் சிலைக்கு ‘ஒற்றுமையின் சிலை’ (Statue of Union) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள மிக உயரமான அனுமன் சிலை என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது. Indian Doctor Arrested: அமெரிக்காவில் இந்திய மருத்துவர் கைது; சுமார் 13 ஆயிரம் ஆபாச வீடியோக்கள் பறிமுதல்..!
ஒற்றுமையின் சிலை:
இதுகுறித்து சிலை அமைத்த ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவிக்கையில், 'ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி டெக்சாஸின் சுகர்லேண்ட் (Sugar Land) பகுதியில் உள்ள ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி கோயிலில் (Sri Ashtalakshmi Temple) நடந்த பிரதிஷ்டை விழாவில் அனுமனின் சிலையை நிறுவியுள்ளோம். இதனை ஒற்றுமையின் சின்னம். சுயநலமற்ற தன்மை, அர்ப்பணிப்பு, ஒற்றுமையின் அடையாளமாக பார்க்கின்றோம். ராமர்-சீதா மீண்டும் இணைய அனுமன் முக்கிய பங்காற்றியதை நினைவுபடுத்தவே இந்தச் சிலைக்கு ‘ஒற்றுமையின் சிலை’ எனப் பெயரிட்டுள்ளோம். சுமார் 90 அடி உயரம் கொண்ட வெண்கலத்திலான அனுமன் சிலை, அமெரிக்காவின் கலாச்சாரம் மற்றும் ஆன்மிக வழியில் ஒரு புதிய மைல்கல்லாக இருக்கும். மேலும், டெக்சாஸின் புதிய அடையாளமாகவும் இருக்கும் என நம்புகிறோம்' என்றனர்.
பிரதிஷ்டை விழா:
இந்திய சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட் 15) தொடங்கிய அனுமன் சிலை பிரதிஷ்டை விழா ஆகஸ்ட் 18-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தச் சடங்குகள் அனைத்தும் ஸ்ரீ சின்ன ஜீயர் சுவாமிஜி மேற்பார்வையில் நடைபெற்றன. இதில், ஹெலிகாப்டர் மூலம் பூக்கள் தூவப்பட்டன. பல்வேறு இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் சிலையின் மீது தெளிக்கப்பட்டது. அனுமன் சிலைக்கு 72 அடியிலான பிரம்மாண்ட மாலை அணிவிக்கப்பட்டது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீராமர், அனுமன் பெயர்களை பக்தியுடன் முழக்கமிட்டனர்.