King Cobra: ராஜநாகத்தை அசால்ட்டாக டீல் செய்யும் நபர்; பார்க்கவே மெய்சிலிர்க்கவைக்கும் காணொளி.!
மனிதரின் உயிரத்திற்கு எழும்பி தாக்கவல்ல ராஜநாகத்தை, இந்தோனேஷியர் ஒருவர் இலாவகமாக கையாண்ட சம்பவம் நடந்துள்ளது.
அக்டோபர் 12, ஜகர்தா (World News): உலகிலேயே மிக நீண்ட, அதிக விஷத்தன்மை கொண்ட ஆபத்தான பாம்பு வகைகளில் ஒன்றாக இருப்பது ராஜநாகம். சுமார் 4 மீட்டர் நீளம் வரை வளரும் தன்மை கொண்ட ராஜநாகம், 20 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டவை ஆகும். தென்கிழக்கு ஆசியா, தெற்கு சீனா, இந்தியாவில் பரவலாக காணப்படும் ராஜநாகம், பழுப்பு சாம்பல் நிறத்துடன் தோற்றம் அளிக்கிறது.பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்ற பழமொழிக்கேற்ப, கோபம், ஆக்ரோஷம் என கொந்தளிப்புடன் காணப்படும் ராஜநாகம், தன்னை கையாளத்தெரியும் நபர்களிடம் பெட்டிப்பாம்பாய் அடங்கும் தன்மை கொண்டது ஆகும். Mosquitoes inside Food: ஆசையாக வாங்கிய இனிப்பில் கிடந்த கொசுக்கள்; இனிப்பகத்தில் வாடிக்கையாளர்கள் வாக்குவாதம்.!
இந்தோனேஷியரின் சாதுர்ய மற்றும் தைரியமான செயல்:
ஆனால், ஒரு நொடி அலட்சியம், உயிரை சில நொடிகளில் பறித்துவிடும். தனது நீளத்திற்கு ஏற்ப மனிதரின் உயிரத்திற்கு எழும்பி கடிக்கும் தன்மை கொண்ட ராஜநாகங்கள், அடர்ந்த மலைப்பகுதிகளில் வாழும் தன்மை கொண்டவை ஆகும். 100 மீட்டர் தூரத்தில் நடக்கும் செயல்களையும், அசைவையும் தனது உணர்திறன் மூலமாக இவை அறிந்துகொள்ளும். ஆபத்தான காலங்களில் மிகவும் மூர்க்கத்தனமாக நடக்கும் தன்மை கொண்டவை. இந்நிலையில், இந்தோனேசியா நாட்டை சேர்ந்த பாம்பு பிடிக்கும் நபர், மிகவும் எளிதான முறையில் ராஜநாகத்தை கையாளுகிறார். ராஜநாகத்தின் அசைவுகளை நன்கு கற்றுத்தேர்ந்த நபர், அதன் அசைவை வைத்து ராஜநாகத்தை சாந்தபடி, அதன் வாழ் பகுதியில் சிக்கியிருந்ததை எடுத்து விடுவித்தபின் நான் உன்னை சீண்டவில்லை என்பதை போல செய்கையால் பாம்புக்கு உணர்த்தி அங்கிருந்து செல்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
பாம்புடன் எளிதான முறையில் பழகும் இந்தோனேசிய நபர்: