Baby Rescued Under the Rubble In Gaza: கட்டிட இடிபாடுகளில் சிக்கித்தவித்த பச்சிளம் பெண் குழந்தை: 37 நாட்கள் கழித்து உயிருடன் மீட்கப்பட்ட அதிசயம்..!
குழந்தை மீட்கப்பட்டு உயிருடன் இருப்பது உறுதி செய்யப்பட்டதும், தங்களின் குழந்தையை போல ஒவ்வொரு பணியாளரும் உற்சாகமடைந்த, அல்லாஹ் அக்பர் என்று முழக்கமிட்டு மகிழ்ச்சியை அடைந்தனர்.
நவம்பர் 30, காசா (Gaza): மத்திய கிழக்கு (Middle East Countries) நாடுகளை கடந்த ஒரு மாதத்தை கடந்தும் பதற்றத்திற்குள்ளாக வைத்துள்ள சம்பவமாக இஸ்ரேல் - ஹமாஸ் (Israel Hamas War) பயங்கரவாதிகள் இடையேயான போர் இருந்து வருகிறது. மத்திய கிழக்கில் உள்ள இஸ்ரேல் நாட்டை எதிர்த்து, பாலஸ்தீனியத்தை சேர்ந்த ஹமாஸ் பயங்கரவாதிகள் அக்.07ம் தேதி திடீர் போர் அறிவிப்பை வெளியிட்டு பல்முனை தாக்குதல் நடத்தினர்.
இஸ்ரேல் நாட்டுக்குள் எல்லைகளை தகர்த்து முன்னேறிய ஹமாஸ் பயங்கரவாதிகள் குழு, எல்லைப்பகுதியில் உள்ள இஸ்ரேலிய நகரங்களில் வாழும் மக்களை குறிவைத்து ஈவு இரக்கமின்றி (Horror Chilling Murder by Hamas) கொலைகள் செய்தனர். கண்ணில் படுவோரை சுட்டுத்தள்ளியும், வீடு வீடாக தேடுதல் வேட்டை நடத்தி வயது வித்தியாசமின்றி பலரும் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.
ஹமாஸ் பயங்கரவாதிகளின் போர் தாக்குதலையடுத்து, தனது முழு இராணுவத்தையும் களமிறங்கிய இஸ்ரேல் காசா (Gaza Strip Air Strike) நகரில் முன்னறிவிப்பை வெளியிட்டு, மக்களை பாதுகாப்பான இடத்திற்கு விரைந்து சென்றுவிட அறிவுறுத்தி தாக்குதல் நடத்தியது. பதற்றமடைந்த பாலஸ்தீனிய மக்கள் பலர் தங்களின் வாழ்விடங்களை விட்டு இடம்பெயரத்தொடங்கினர்.
சிலர் வீடுகளிலேயே தங்கிவிட, வான்வழி தாக்குதல் குறித்த எச்சரிக்கை ஒலி வெளியிடப்பட்ட சிலமணிநேரத்திற்குள் தொடர் தாக்குதலால் காசா நகரமே சிதையுண்டு போனது. இதனால் தற்போது வரை 15000 க்கும் (Palestine War Death Toll) மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒட்டுமொத்தமாக ஒழிக்காமல், எங்களின் இராணுவ நடவடிக்கை ஓயாது என இஸ்ரேலின் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) தெரிவித்தார். Trichy Shocker: மாணவரை திருத்துவதாக எண்ணி மனநோயாளியாக்கிய கொடூர ஆசிரியர்: திருச்சியில் பயங்கர சம்பவம்.. 15 வயது மாணவனுக்கு நேர்ந்த சோகம்.!
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹமாஸ் பயங்கரவாதிகளால் பிடிக்கப்பட்ட பிணையக்கைதிகளை (Hostages) ஒப்படைக்க இடைக்கால போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அதன்படி, தற்போது வரை 97 பேர் இஸ்ரேலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இஸ்ரேலால் பிடிக்கப்பட்ட ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்களும் பாலஸ்தீனியம் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
இஸ்ரேல் போரில் களமிறங்கியதும், அதற்கு ஆதரவாக அமெரிக்கா (Israel Supports America) இராணுவ தளவாடங்கள் வழங்கியது. போர்கப்பலையும் செங்கடலுக்கு அனுப்பி வைத்தது. பாலஸ்தீனிய ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக ஈராக் உட்பட மத்திய கிழக்கு நாடுகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் சகல உதவி செய்தன. போரின் நடுவில் பாலஸ்தீனியத்தில் மக்கள் எழுப்பிய அபயக்குரலால், உலக நாடுகள் மருத்துவம் & அத்தியாவசிய உபகரணங்களை மனிதாபிமான அடிப்படையில் தொடர்ந்து அனுப்பி வைக்கிறது.
இந்நிலையில், காஸாவில் கட்டிட இடிபாடுகளில் சிக்கியோரை மீட்கும் பணியானது தொடர்ந்து நடைபெறுகிறது. அப்போது, கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியிருந்த பிறந்த பச்சிளம் (Baby Rescued Under the Rubble In Gaza) குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. 37 நாட்களாக இடிபாடுகளில் சிக்கிய குழந்தை பிறந்து 30 நாட்களுக்குள் இருக்கும் என மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
குழந்தைக்கு ஸலாம் என பெயரிட்டுள்ள அதிகாரிகள், அவள் அமைதியை தருபவளாக இருக்க வேண்டும் என கூறினார். அல்லாஹ் அக்பர் என்ற முழக்கத்துடன், பலரும் குழந்தையை தங்களின் மகள் போல அரவணைத்து ஆரத்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். குழந்தையின் பெற்றோர் இருவரும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துவிட்டனர்.