Victim Father Iqbal | Kajamiyan Higher Secondary School, Trichy (Photo Credit: Facebook)

நவம்பர் 30, திருச்சி (Trichy News): திருச்சியில் வசித்து வருபவர் இக்பால். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். மூத்த மகன் அங்குள்ள காஜா மியான் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வருகிறார்.

இந்நிலையில், மாணவர் சரிவர படிக்கவில்லை என்று கூறி, கடந்த அக்.03ம் தேதி வகுப்பு ஆசிரியர் மாணவரை கடுமையாக தாக்கியதாக தெரியவருகிறது. இதனால் அவரின் மனநலம் பாதிக்கப்பட்டு, உடனடி வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட மாணவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அவர் பள்ளிக்கு செல்லமாட்டேன் என அடம்பிடித்து, ஆசிரியரின் பெயரை கூறினாலே பதறும் அளவுக்கு மனநிலையை சந்தித்துள்ளார். Telangana Assembly Elections 2023: அனல்பறக்கும் தெலுங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தல்: மக்களோடு மக்களாக வாக்கு செலுத்திய நடிகர் அல்லு அர்ஜுன்.! 

இதுகுறித்து ஆவேசமான பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் சென்று கேட்டபோது உரிய பதில் அளித்ததாக தெரியவில்லை. இதனையடுத்து, மாவட்ட கல்வி அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புகாரை ஏற்ற அதிகாரிகள் விசாரணை நடத்திவந்த நிலையில், மாணவரை கல்வி அலுவலர் நேரில் அழைத்து விசாரித்தபோது சம்பந்தப்பட்ட ஆசிரியரின் புகைப்படத்தை காண்பித்து விபரம் கேட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவர், ஆசிரியரின் புகைப்படத்தை பார்த்ததும் அதிர்ச்சியடைந்து மயங்கி விழுந்து வலிப்பு பிரச்சனையை எதிர்கொண்டுள்ளார். உடனடியாக மாணவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சம்பந்தப்பட்ட ஆசிரியரை பணிநீக்கம் செய்வதாகவும் தெரிவித்துள்ளார். ஆசிரியரின் கடுமையான செயலால், மாணவரின் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.

மாணவர் படிப்பை தடையின்றி தொடர, மாற்று பள்ளியில் சேரவும் உதவி செய்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.