Gunmen Shot Against Tourist in Afghanistan: சுற்றுலாப்பயணிகள் மீது துப்பாக்கிசூடு; 4 பேர் பலி., ஆப்கானிஸ்தானில் அதிர்ச்சி.!
பயங்கரவாதத்திற்கு பெயர்போன நாடாக இருக்கும் ஆப்கானிஸ்தானில், தலிபான் ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. உலகளாவிய ஆதரவை பெற பல விசயங்களில் தனது கட்டுப்பாடுகளை தளர்த்திக்கொண்டாலும், சர்ச்சை தாக்குதல்கள் தொடருகின்றன.
மே 18, பேய்மன் சிட்டி (World News): ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வந்த மக்களாட்சி, தலிபான்களின் அதிகாரத்தால் அகற்றப்பட்டது. அமெரிக்க படைகளை முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் படிப்படிப்பாக ஆப்கானிஸ்தானில் இருந்து விலக்கிக்கொண்டதை தொடர்ந்து, தலிபான் தனது முழு சக்தியை பயன்படுத்தி ஆட்சியை தன்வசப்படுத்தியது. தாங்கள் ஆட்சிக்கு வந்துவிட்ட பின், முன்பை போல அல்லாமல் நாட்டை பாதுகாப்போம், உலக நாடுகள் எங்களுக்கு ஆதரவுக்கரம் நீட்ட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தது. Bus Caught Fire 8 Died: தனியார் சொகுசு பேருந்து தீப்பிடித்து பயங்கர விபத்து; 8 பயணிகள் உடல் கருகி பலி.! ஆன்மீக சுற்றுலாவில் சோகம்.!
தலிபான் அரசின் தடைகளும், மக்கள் பயமும்: ஆனால், இன்று வரை மனிதாபிமான உதவிகளை மட்டும் பெற்றுவரும் ஆப்கானிஸ்தானில் (Afghanistan Crisis) உள்நாட்டு பொருளாதார சிக்கல், பணவீக்கம், மக்கள் அகதிகளாக வெளியேறுதல் உட்பட பல பிரச்சனைகள் இருக்கின்றன. தலிபான் தலைமையிலான ஆப்கானிய அரசு பெண்களுக்கெனவும் பல தடைகளை விதித்து இருக்கிறது. சமீபகாலமாக அங்கு சுற்றுலாவை ஊக்குவிக்கும் பணிகளும் நடைபெறும் நிலையில், பல நாடுகளை சேர்ந்த வீடியோ தயாரிப்பாளர்கள் ஆப்கானிஸ்தானுக்கு சென்று வருகின்றனர். Chennai Drug Injection Death Case: போதை ஊசியால் இளைஞர்கள் பலியான விவகாரம்; 4 பேர் கும்பல் அதிர்ச்சிகர வாக்குமூலம்.!
சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல்: இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள பேய்மன் நகரில் சுற்றுலா பயணிகளுக்கு எதிராக மர்ம நபரால் துப்பாக்கிசூடு தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 3 சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூரை சேர்ந்த ஒருவர் என 4 பேர் பலியாகினர். 2 பேர் கவலைக்கிடமான வகையிலும், 2 பேர் லேசான காயத்துடனும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் எதனால் நடத்தப்பட்டது? இந்த தாக்குதலை பிற பயங்கரவாத கும்பல் நடத்தியதா? என விபரங்கள் விசாரிக்கப்பட்டு வருகிறது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)