மே 18, நூஹ் (Haryana News): பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா, ஹோஷியார்பூர் பகுதியை சேர்த்த 60 க்கும் மேற்பட்ட நபர்கள் ஆன்மீக சுற்றுலாவுக்கு சென்றுள்ளனர். இவர்கள் தனியார் சொகுசு பேருந்தில் பயணம் செய்த நிலையில், இன்று நள்ளிரவு 01:30 மணியளவில், இவர்களின் பேருந்து ஹரியானா மாநிலத்தில் உள்ள நூஹ் நகருக்கு அருகே பயணம் செய்துள்ளது. குண்டலி - மனேசர் - பல்வாள் () அதிவிரைவு சாலையில் பேருந்து பயணம் செய்தபோது, பேருந்தில் கருகிய வாடை அடித்துள்ளது. பேருந்து ஓட்டுநர் மற்றும் பயணிகளுக்கு எதுவும் தெரியாத நிலையில், சாலையில் பயணம் செய்த இருசக்கர வாகன ஓட்டி இதனை கவனித்துள்ளார். இதனையடுத்து, பேருந்தை துரத்திச்சென்றவர் ஓட்டுனருக்கு விஷயத்தை தெரிவித்துள்ளார். Chennai Drug Injection Death Case: போதை ஊசியால் இளைஞர்கள் பலியான விவகாரம்; 4 பேர் கும்பல் அதிர்ச்சிகர வாக்குமூலம்.!
8 பேர் உடல் கருகி பலி., 24 பேர் காயம்: இதனையடுத்து, உடனடியாக பேருந்து ஓட்டுநர் சுதாரித்து வாகனத்தை சாலையோரம் நிறுத்திய நிலையில், பேருந்து தீப்பிடித்து எரியத்தொடங்கியுள்ளது. பயணிகளில் பலர் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ஜன்னலை உடைத்து கீழே குதித்து வெளியேறியுள்ளனர். 10 நபர்களால் பேருந்தில் இருந்து வெளியே வர இயலவில்லை. தீயின் பிடியில் சிக்கியவர்கள் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர் தீயனை அணைத்து பலியானோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்தில் காயமடைந்த 24 நபர்களும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்த தகவல் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
VIDEO | At least eight people were killed when the bus they were travelling in caught fire on the Kundli-Manesar-Palwal (KMP) Expressway near Nuh, #Haryana, late on Friday.
(Source: Third Party) pic.twitter.com/xeE7XkhBGD
— Press Trust of India (@PTI_News) May 18, 2024