Japan Earthquake: தைவானைத் தொடர்ந்து ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதா?.!

ஜப்பான் நாட்டில் 2-வது முறையாக இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

Japan Earthquake (Photo Credit: @DisasterTrackHQ X)

ஏப்ரல் 04, டோக்கியோ (World News): தைவான் (Taiwan) நாட்டின் தலைநகரான தைப்பேவில் (Taipei City) நேற்று காலை பயங்கர நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்டது. அந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 7.4 அலகுகளாக பதிவாகியது. இந்த கடும் நிலநடுக்கத்தால் பல மாடி கட்டிடங்கள் சரிந்து விழுந்து தரைமட்டமாகின. இதில் 9 பேர் உயிரிழந்தனர். 1,000-த்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பொதுமக்கள் உயிருக்கு அஞ்சி வீதிகளில் தஞ்சமடைந்தனர். மேலும் தைவானில் சுரங்கப் பாதைகள் மூடப்பட்டன. அதுமட்டுமின்றி தைவானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும் ஜப்பானின் தென் பகுதி ஒகினாவா தீவையும் தைவான் நிலநடுக்கத்தால் ஏற்படும் சுனாமி அலைகள் தாக்கும் எனவும் சுமார் 8 முதல் 9 அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் தாக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டது. இதனால் ஒகினாவில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. தைவான், ஜப்பான் நாடுகளின் சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் நாடும் கடலோரப் பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தியது. எனினும், ஜப்பான் மற்றும் பிலிப்பைன்சில் இருந்து சுனாமி எச்சரிக்கை பின்னர் வாபஸ் பெறப்பட்டது. Mustafizur Rahman Likely to Miss CSK vs SRH: ஒரு பிரச்சனை காரணமாக சிஎஸ்கே அணியை விட்டு கிளம்பிய முஷ்டாஃபிசுர் ரஹ்மான்.. என்ன பிரச்சனை தெரியுமா?

அத்தகைய சூழலில் நேற்று இரவு ஜப்பானில் (Japan) பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் ஜப்பான் நாட்டின் ஹொன்ஷு கிழக்கு கடலோர பகுதியில் 2-வது முறையாக இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. எனினும் ஜப்பானில் இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.