ஏப்ரல் 03, விசாகப்பட்டினம் (Sports News): ஐபிஎல் (IPL) கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணி விளையாடிய 3 போட்டிகளில் 2 வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 5ஆம் தேதி ஐதராபாத் அணிக்கு (CSK vs SRH) எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி விளையாடவுள்ளது. அந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் வேகப்பந்துவீச்சாளர் முஷ்டாஃபிசுர் ரஹ்மான் (Mustafizur Rahman) விளையாட வாய்ப்பில்லை என்று தெரிய வந்துள்ளது. AC Buying Guide: அடிக்கிற வெயிலுக்கு ஏசி வாங்க போறீங்களா.?. அப்போ இதெல்லாம் தெரிந்துக்கொள்ளுங்கள்..!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் மாதம், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா மைதானங்களில் நடக்கவுள்ளது. அமெரிக்காவில் இஸ்லாமியர்களுக்கு விசா கிடைப்பதில் சில பிரச்சனைகள் இருப்பதால், வங்கதேச கிரிக்கெட் வாரியம் தரப்பில் விசாவுக்கான முன்னேற்பாடுகள் இப்போதே தொடங்கிவிட்டன. இதனால் விசா நடவடிக்கைகளுக்காக முஷ்டாஃபிசுர் ரஹ்மான் வங்கதேசத்திற்கு சென்றுள்ளார். இதனால் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவதற்கு வாய்ப்பில்லை என்று தெரிய வந்துள்ளது.