IPL Auction 2025 Live

Russia Jails Woman For Writing "No To War": வாக்குச்சீட்டில் ‘போர் வேண்டாம்’ என எழுதிய பெண்.. சிறை தண்டனை விதித்த ரஷ்யா அதிபர்..!

ரஷ்யாவில் வாக்குச்சீட்டில் ‘போர் வேண்டாம்’ என எழுதிய பெண்ணுக்கு 8 நாட்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Vladimir Putin (Photo Credit: Instagram)

மார்ச் 21, மாஸ்கோ (World News): உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடுகளில் ஒன்றான ரஷியாவில், கடந்த மார்ச் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை 08 வது அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த நடைபெற்று முடிந்த தேர்தலில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் (Vladimir Putin) மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். இதனால் அவர் மீண்டும் ரஷிய அதிபராக 2030 வரை நீடிப்பார். அந்நாட்டில் அதிபருக்கான பதவிக்காலம் 6 ஆண்டுகள் என்பதால், 2024ல் தேர்தல் நிறைவுபெற்றதை தொடர்ந்து 2030 வரை அதிபர் பொறுப்பில் விளாடிமிர் புதின் தொடருவார். அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள விளாடிமிர் புதின், ரஷிய இராணுவத்தை பன்மடங்கு மேம்படுத்தப்போவதாக செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து இருந்தார். Sudden Death Caught on Camera: திடீரென்று நடுரோட்டில் மயங்கி விழுந்த நபர் பலி.. கண்டுகொள்ளாத மக்கள்.. வைரலாகும் வீடியோ..!

ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே போர் நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே. இந்த ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைனிய மக்கள் பல நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர். எந்த ஒரு பிரச்னைக்கும் போர் தீர்வாகாது என பலர் குரல் கொடுத்து வருகின்றனர். இதனிடையே வாக்கு எண்ணிக்கையின் போது, வாக்குச்சீட்டில் (election ballot) ‘போர் வேண்டாம்’ (No To War) என எழுதிய பெண்ணுக்கு 8 நாட்கள் சிறை தண்டனை வழங்கியுள்ளது அந்நாட்டு அரசு. மேலும் அந்த பெண்ணுக்கு ரூ. 40,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய ராணுவத்தை அவமதித்ததாக குற்றம்சாட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.