"என் அம்மா, சகோதரிக்கு இல்லாத படிப்பு எனக்கும் வேண்டாம்" - நேரலையில் சான்றிதழை கிழித்த பேராசிரியர்.!
தாலிபான்களால் பறிக்கப்பட்ட பெண்களின் சுதந்திரத்தால், பெண்களுக்கு கிடைக்காத கல்வி எனக்கும் வேண்டாம் என பேராசிரியர் நேரலையில் அதிர்ச்சி செயலை மேற்கொண்டார்.
டிசம்பர் 28, காபூல்: தாலிபான்களால் பறிக்கப்பட்ட பெண்களின் சுதந்திரத்தால் (Taliban's Against Women's Right), பெண்களுக்கு கிடைக்காத கல்வி எனக்கும் வேண்டாம் என பேராசிரியர் நேரலையில் அதிர்ச்சி செயலை மேற்கொண்டார்.
ஆப்கானிஸ்தானில் (Afghanistan) நடந்துவந்த ஜனநாயக ஆட்சியானது அகற்றப்பட்டு, தலிபான் அதிகாரத்தை கைப்பற்றி ஆட்சியில் அமர்ந்தது. தலிபான் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த நாட்களில் இருந்து மக்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. பெண்களின் சுதந்திரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள காபூல் பல்கலைக்கழகத்தில் கலந்துகொண்ட பேராசிரியர், நேரலையில் வைத்து தனது கல்வி சான்றிதழ்களை கிழித்து சேதப்படுத்தினார்.
அப்போது அவர் கூறுகையில், "இன்றில் இருந்து எனக்கு கல்வி சான்றிதழ்கள் தேவையில்லை. ஆப்கானிஸ்தான் நாட்டில் கல்விக்கு இடம் என்பது இல்லை. எனது சகோதரி, அம்மா ஆகியோரால் படிக்க முடியவில்லை. எனது அம்மா, சகோதரிக்கு கிடைக்காத படிப்பை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்" என தெரிவித்தார்.