IPL Auction 2025 Live

Afghanistan Girls Barred From School: 13 வயதிற்கு மேல் பெண்கள் பள்ளிகளுக்கு செல்ல தடை.. ஆப்கானிஸ்தானில் தொடரும் வன்கொடுமை..!

ஆப்கானிஸ்தானில் 13 வயதிற்கு மேல் பெண்கள் பள்ளிகளுக்கு செல்லக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

Girls Barred From School (Photo Credit: Pixabay)

மார்ச் 21, காபூல் (Afghanistan News): ஆப்கானிஸ்தான் (Afghanistan) முழுவதும் பள்ளிகள் புதிய கல்வியாண்டிற்காக திறக்கப்பட்டுள்ளன. ஆனால் ஆப்கானிஸ்தானில் 13 வயதிற்கு மேல் பெண்கள் பள்ளிகளுக்கு செல்லக்கூடாது (Girls Barred From School) என தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்து சுமார் 3,30,000 பெண் குழந்தைகள் 6ம் வகுப்புக்கு மேல் படிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. World Forest Day 2024: ஆதவனே அடைய முடியாத பெரும் பரப்பு நம் காடு.. உலக வன தினம்..!

கடந்த 2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் ஆட்சி தலிபான்களின் கைக்கு சென்றதிலிருந்து பெண்கள் உயர்கல்வி பயில தடை விதிக்கப்பட்டது. பெண்கள் இல்லாமல், பெண் கல்விக்கான கட்டுப்பாடுகளைக் கொண்ட ஒரே நாடாக ஆப்கானிஸ்தான் மாறியது. இந்த தடையால் 1 மில்லியனுக்கும் அதிகமான சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா குழந்தைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.