Indonesia Earthquake: இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்.. தெறித்து நடுத்தெருவிற்கு ஓடி வந்த மக்கள்..!

Earthquake (Photo Credit: @Inkhabar X)

ஏப்ரல் 09, இந்தோனேசியா (World News): இப்போதெல்லாம் தினமும் உலகில் ஏதாவது ஒரு இடத்தில் நிலநடுக்கம் (Earthquake) ஏற்படுவது சாதாரணமாகிவிட்டது. அந்த வகையில் கடந்த வரம் தைவான் மற்றும் ஜப்பானில் மிகப்பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது இந்தோனேசியா (Indonesia) நாட்டின் மேற்கு பப்புவா மாகாணத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. Amazon Bazaar: இனி கம்மியான விலையில் தரமான பொருட்களை வாங்கலாம்.. அமேசானின் அசத்தலான புதிய பஜார்..!

இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள வீடுகள் அதிர்ந்துள்ளது. இதனால் அச்சமடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.