Amazon Bazaar (Photo Credit: @devanshm10 X)

ஏப்ரல் 09, புதுடெல்லி (New Delhi): இந்தியாவில் தற்போது இ-காமர்ஸ் (E-Commerce) பிளாட்ஃபார்ம்கள் அதிகரித்துள்ளன. இதனால் தற்போது ஆன்லைன் ஷாப்பிங் என்பது மிகவும் சகஜமாகிவிட்டது. உணவு, பானம், மளிகை பொருட்கள், ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தையும் மக்கள் வீட்டில் இருந்தபடியே வாங்குகின்றனர். மக்கள் பயன்படுத்தும் ஷாப்பிங் ஆப்ஸ்கள் பல உள்ளன. அதிலும் இந்தியாவில் பிரபல ஷாப்பிங் ஆப்-ஆக இருப்பது என்றால், அது அமேசான் தான். Special Bus For Election: 2024 மக்களவை பொதுத்தேர்தல் எதிரொலி.. வாக்காளர்களுக்காக சிறப்பு பேருந்து..! விபரம் இதோ.!

இத்தகைய அமேசான் இந்தியா நிறுவனமானது தனது ஆப்பில் 'பஜார்' என்கிற புதிய ஸ்டோரை அறிமுகம் செய்துள்ளது. இதன்கீழ் அமேசான் இந்தியா வாடிக்கையாளர்கள் பல்வேறு வகையான பிரிவுகளின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள அன்பிராண்டட் தயாரிப்புகளை (Unbranded products) வாங்க முடியும். அதாவது மிகவும் பிரபலம் அடையாத ஆனால் தரமான தயாரிப்புகளை விற்கும் விற்பனையாளர்களிடம் இருந்து கிடைக்கும் அணிகலன்கள், நகைகள், கைப்பைகள், காலணிகள், பாரம்பரிய மற்றும் மேற்கத்திய உடைகள், சமையலறை பொருட்கள், படுக்கைகள், கைத்தறி மற்றும் அலங்கார பொருட்கள் போன்றவைகளை வாங்கலாம்.