Masked Men Attack Woman: சாலையில் நடந்து சென்ற பெண்ணை தாக்கிய மர்ம நபர்கள்; வீடியோ வைரல்..!

நியூயார்க்கில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் சாலையில் நடந்து சென்ற பெண்ணை தாக்கும் சம்பவம் வைரலாக பரவி வருகிறது.

Masked men attack woman (Photo Credit: @UHN_Plus X)

ஜூன் 26, நியூயார்க் (World News): அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் முகமூடி அணிந்த இருவர் சாலையில் நடந்து சென்ற பெண்ணை தாக்கியுள்ள காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. International Day against Drug Abuse and Illicit Trafficking: "விஷத்தை அமுதாய் விழுங்கிட எப்படி முடிகிறது?" சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம்..!

நியூயார்க் நகரில் உள்ள மன்ஹாட்டனில் நேற்றைய தினம் (ஜூன் 25) மதியம் அந்த பெண் சாலையில் நடந்து சென்றுக்கொண்டிருந்தபோது, முகமூடி அணிந்து வந்த இரண்டு மர்ம நபர்களில் ஒருவர் பேஸ்பால் மட்டையை (Baseball Bat) கையில் வைத்துக்கொண்டு அந்த பெண்ணை பலமுறை அடித்து தாக்கியுள்ளார். மற்றொருவர் கையால் அந்த பெண்ணை தலையில் பலமாக அடித்துள்ளார். பட்டப்பகலில் அந்த பெண்ணை மர்ம நபர்கள் தாக்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.