Anura Kumara Dissanayake: இலங்கையின் அதிபராக பொறுப்பேற்றார் அநுர குமார திசாநாயக்க..!
அந்நாட்டின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே தனது பதவியை ராஜினாமா செய்தார்.
செப்டம்பர் 23, கொழும்பு (World News): இந்தியாவின் நெருங்கிய அண்டை நாடாக இருக்கும் இலங்கையில், சமீபத்தில் அதிபருக்கான (Srilanka President Election 2024) தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) 55.82% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதனையடுத்து, அவர் இலங்கை அதிபராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், கொழும்பில் உள்ள இலங்கை பாராளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார். சுமார் 38 அதிபர் வேட்பாளர்கள் இம்முறை வேட்பாளர்களாக களமிறங்கியிருந்த நிலையில், நீண்ட இழுபறிக்கு பின்னர் மக்கள் சக்தி கட்சியின் அனுர குமார திசநாயக்க இலங்கை அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து உழைப்பால் உயர்ந்தவர்:
இவர் இலங்கையின் 9 அதிபராக பொறுப்பேற்றுள்ளார். இலங்கை நாட்டின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜயந்த ஜயசூர்ய முன்னிலையில், அவர் தனது பதவிப்பிரமாணத்தை செய்து கொண்டார். அதிபர் பதவி ஏற்றதைத் தொடர்ந்து அவர் புத்த பித்ருக்களிடம் ஆசியும் பெற்றுக் கொண்டார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சார்ந்த அனுர திசநாயக்க தனது பள்ளி பருவத்திற்கு பின்னர் அரசியலில் மிக தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது அந்நாட்டின் அதிபராக பொறுப்பேற்று இருக்கிறார். Armstrong Murder Case: கே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய ரௌடி சீசிங் ராஜா சுட்டுக்கொலை; யார் இந்த ராஜா?..
மக்கள் போராட்டத்திற்கு தலைமை:
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்ட நிலையில், அவர் மூன்று லட்சம் வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார். அதனைத்தொடர்ந்து, இலங்கையில் பல்வேறு சர்ச்சை சூழ்நிலைகள் நடைபெற்று, இடைக்கால அரசும் பொறுப்பேற்று ஆட்சியை வழி நடத்தி வந்த நிலையில், தற்போது அதிபர் தேர்தல் நடைபெற்று முடிந்து, அதில் அனுகுமார திசநாயக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தனது அரசியல் பயணத்தில் பல அனுபவங்களை எதிர்நோக்கி இருந்த திசநாயக்க, இலங்கையில் தொடர் மின்வெட்டு, பணவீக்கம் சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சனைகளைத் தொடர்ந்து வெடித்த மக்கள் போராட்டத்திற்கு தலைமை பொறுப்பேற்றும் இருந்தார். தற்போது அவர் மக்கள் ஆதரவுடன் வெற்றியை அடைந்துள்ளார்.
பதவியேற்புக்கு பின்னர் மக்களிடம் சில நிமிடங்கள் உரையாடிய திசநாயக்க, "பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கும் இலங்கையை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டியது அவசியம். சிங்களர்கள், தமிழர்கள், இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து நமது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்போம்" என பேசினார்.
இலங்கை அதிபராக பொறுப்பேற்றுக்கொண்ட அனுர குமார திசநாயக்க: