PM Modi Austria Visit: 2047க்குள் முதல் மூன்று பொருளாதார நாடுகளில் இடம்பெற்றுள்ள இந்தியா - ஆஸ்திரியாவில் பிரதமர் மோடி பெருமிதம்.!
வரலாற்று இணைப்புடன் கலாச்சார பரிமாற்றம், வர்த்தகம், அமைதி போன்றவை இந்தியா உலக நாடுகளுக்கு அளித்த பரிசு என பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
ஜூலை 11, வியென்னா (World News): 2 நாட்கள் அரசுமுறைப் பயணமாக ரஷியா (PM Modi Russia Visit) சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனைத்தொடர்ந்து, இந்தியர்களையும் நேரில் சந்தித்தார். பின் அங்கிருந்து ஆஸ்திரியா நாட்டுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தி பின் தாயகம் திரும்பினார். பிரதமராக மூன்றாவது முறை பொறுப்பேற்றுக்கொண்ட நரேந்திர மோடியின் உலகளாவிய இப்பயணம் கவனம், சர்வதேச அளவில் கவனம் பெற்றது. Notorious Burglar Moorthy Arrested: 1500 சவரன் நகைகள் கொள்ளையடித்து, திருட்டு பணத்தில் மில் வாங்கி தொழிலதிபர் வாழ்க்கை..! அதிரவைக்கும் தகவல் இதோ.!
அறிவு, நிபுணத்துவத்தை பகிரும் இந்தியா:
இந்நிலையில், ஆஸ்திரியா (PM Modi Austria Visit) நாட்டில் உள்ள வியன்னாவில் நடைபெற்ற நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அந்த கூட்டத்தில் அவர் பேசுகையில், "இந்தியா - ஆஸ்திரியா நட்பு என்பது வரலாறு, கலாச்சார பின்னணி கொண்டது. வரலாற்று இணைப்புடன் கலாச்சார பரிமாற்றம் மற்றும் வர்த்தகம், நமது நாடுகளை மேலும் பின்னிப்பினைக்கவைத்துள்ளது. இந்தியாவின் எண்ணங்கள், செயல்களில் உலகளாவிய ஆர்வம் ஏற்பட்டுள்ளது. பலஆயிரம் ஆண்டுகளாக இந்தியா அறிவு, நிபுணத்துவம், ஆகியவற்றை உலகத்துடன் பகிர்ந்துகொண்டுள்ளது. போரினைக்காட்டிலும் அமைதி, செழிப்பை மேம்படுத்துகிறது.
2047 க்குள் இலக்கை எட்டிப்பிடிக்கும்:
சர்வதேச அளவில் இந்தியா தொடர்பாக பல விவாதங்கள் நடக்கைன்றன. இந்தியா என்ன எண்ணத்தில் இருக்கிறது? என்ன செய்கிறது? என்ற தகவல் உலகளவில் சுவாரசியம் அடைந்துள்ளது. இந்தியா யுத்தத்தை கொடுக்கவில்லை, புத்தரை கொடுத்தது. இந்தியா எப்போதும் அமைதி மற்றும் செழிப்பை வழங்குகிறது. இந்தியா - ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கு இடையேயான உறவு என்பது அரசாங்கத்தால் மட்டும் உருவாக்கப்படவில்லை. உறவுகளை வலுப்படுத்த எப்போதும் பொதுமக்களின் பங்களிப்பு என்பது அவசியம். இந்தியா உலகளவில் முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக மாறுவதை இலக்காக வைத்து செயல்படுகிறது. தனது இலட்சியப்பாதையில் வளருகிறது. இந்தியா தன் 100வது சுதந்திரத்தை கொண்டாடும் 2047ம் ஆண்டில் அந்த இலக்கை எட்டிப்பிடித்துவிடும். 1000 ஆண்டுகளுக்க்கு வலுவான இந்தியாவை நாம் கட்டமைக்கிறோம்" என கூறினார்.