Moothy Thief Gang (Photo Credit: @wilson__thomas X)

ஜூலை 11, கோவை (Coimbatore News): தனியாக, ஊருக்கு ஒதுப்புறமாக, தண்டவாளங்களுக்கு அருகே இருக்கும் வீடுகளை குறிவைத்து, முகமூடி அணிந்த கும்பல் தொடர் கொள்ளைச்செயலில் ஈடுபட்டு வந்தது. இந்த கும்பல் கோவை, இராஜபாளையம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருக்கும் வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்டது குறித்து காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, கடந்த ஜூன் 18ம் தேதி விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த 2 பேரை காவல்துறையினர் விசாரணை செய்தனர்.

8 பேர் கும்பல் கைது:

இவர்கள் இருவரும் தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், தென்கரை கிராமத்தை சேர்ந்த அருண்குமார் (23), சுரேஷ்குமார் (26) என்பது உறுதியானது. இருவரும் இராஜபாளையம், ஆண்டாள்புரம் பகுதியில் கணவன் - மனைவியை கட்டிப்போட்டு நகைகளை திருடிவிட்டு வந்தது தெரியவந்தது. இவர்கள் அளித்த வாக்குமூலத்தின்பேரில் கொள்ளைச்சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட பெரியகுளம் பகுதியை சேர்ந்த மூர்த்தி (33), அவரின் தாய் சீனித்தாய் (53), மூர்த்தியின் மனைவி அனிதா (29), உறவினர் நாகஜோதி (25), லட்சுமி, மகாலட்சுமி, மோகன் என 8 பேர் கைது செய்யப்பட்டனர். TN Weather Update: 4 மாவட்டங்களில் 10 மணிவரை தொடரும் மழை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.! 

தனிப்படை காவல்துறையின் அதிரடி:

அதிகாரிகளின் விசாரணையில் அதிர்ச்சி தகவலாக, இக்கும்பல் தமிழ்நாடு முழுவதும் 45 க்கும் மேற்பட்ட இடங்களில் கொள்ளையடித்த ரூ.75 இலட்சம் மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் வாங்கிய ரூ.4 கோடி மதிப்பிலான ஸ்பின்னிங் மில் ஆவணத்தையும் கைப்பற்றினர். தலைமறைவாக இருந்த மூர்த்தி தனிப்படை அதிகாரிகளால் கோவையில் வைத்து கைது செய்யப்பட்டார். இந்த விஷயம் குறித்து கோவை மாநகர காவல் ஆணையர் ஸ்டாலின், மேலும் பல பரபரப்பு தகவலை வெளியிட்டு இருக்கிறார்.

துப்புக்கொடுத்த முகமூடி-இரும்பு ராடு:

மூர்த்தி என்ற ராடுமேன் மீது 18 கொள்ளை வழக்குகள் கோவையில் மட்டும் இருக்கின்றன. மொத்தமாக தமிழ்நாடு முழுவதும் 68 வழக்குகள் இருக்கின்றன. இந்த கும்பலில் முக்கியப்புள்ளிகளாக இருந்த மூர்த்தி மற்றும் ஹம்சராஜ் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ராடை பயன்படுத்தி கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் முகமூடி கும்பல் ஆகும். கோவையில் உள்ள சிங்காநல்லூர், பீளமேடு, துடியலூர், இராமநாதபுரம், திருப்பூர் மாவட்டத்தின் ஒட்டன்சத்திரம், விருதுநகர் மாவட்டத்தின் ராஜபாளையம் பகுதிகளில் இவர்கள் தங்களின் கைவரிசையை காண்பித்து இருக்கின்றனர்.

ரூ.4 கோடிக்கு மில் வாங்கி தொழிலதிபர் வாழ்க்கை:

தமிழ்நாடு முழுவதுமாக மொத்தம் 1500 சவரன் நகைகள், கோவை மாவட்டத்தில் 376 சவரன் நகைகள், இரண்டு கார்கள், ரூ.13 இலட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனம் ஆகியவற்றை கொள்ளையடித்துள்ளனர். கார்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொள்ளையடித்த நகைகளை உருக்கி தங்கக்கட்டிகளாக விற்பனை செய்த கும்பல், அதனை வைத்து விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் ரூ.4 கோடி மதிப்பில் ஸ்பின்னிங் மில் ஒன்றையும் வாங்கி முதலீடு செய்துள்ளது. Snake Found on Passenger Train: வாலை காட்டி ஆட்டிய பாம்பு; நடுநடுங்கிப்போன பயணிகள்.. இரயில் பயணத்தில் நடந்த சம்பவம்.! 

குடும்பமாக சேர்த்து திருட்டுத்தொழில்:

இந்த குற்றத்திற்கு மூர்த்தியின் மனைவி உடந்தையாக இருந்துள்ளார். இராஜபாளையம் காவல்துறையினர் சுரேஷை கைது செய்ததைத்தொடர்ந்து, அடுத்தடுத்து விசாரணை மேற்கொண்டு கோவை வரை வந்துள்ளனர். இந்த தனிப்படை பல மாவட்டங்களில் கிடைத்த சிசிடிவி கேமிரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்தது. சிசிடிவி காட்சிகளின் பேரில் கண்கள், வாய் போன்ற அசைவுகளையும் கண்காணித்து முக ஓவியம் வரைந்தும் விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

இந்த கும்பல் பெரும்பாலும் இரயில் தண்டவாளத்தை ஒட்டியுள்ள பகுதிகளை கவனித்துள்ளது. அந்த பகுதிகளில் கேமரா இருக்காது, நாய்கள் தொல்லை இல்லை, ஆட்கள் நடமாட்டம் குறைவு போன்ற காரணங்களை மையப்படுத்தி திருட்டு செயல்களில் ஈடுபட்டுள்ளது. வீட்டில் ஆட்கள் இருந்தாலும், அவர்களை குழப்ப வேறு மொழிகளில் பேசி இருக்கின்றனர். இதனால் வேறு மாநில கொள்ளை கும்பலாக இருக்கும் என முதலில் சந்தேகித்தாலும், பின் படிப்படியான விசாரணையில் உண்மை அம்பலமாகி இருக்கிறது" என தெரிவித்தார்.