US - China Talks on Taiwan Issue: மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தைவான் பிரச்சனை; அமெரிக்கா - சீனா உறவுகள் பாதிப்படைய வாய்ப்பு.!
தைவான் ஜலசந்தி பகுதியில் சீனா தனது போர்கப்பல்களை நிலைநிறுத்தி போர் விமானங்களை ஏவுவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஜனவரி 28, தைப்பே (World News): தென்சீன - கிழக்கு சீன கடலுக்கு நடுவே அமைந்துள்ள தீவு நாடு தைவான் (Taiwan). சீனாவின் அங்கமாக வரலாறுகளில் பதிவு செய்யப்பட்ட தைவான், பின்னாளில் தனி நாடாக அங்கீகாரம் பெற்றது. ஆனால், சீனா தைவானை இன்றளவும் சொந்தம் கொண்டாடி, அதனை கைப்பற்றும் முனைப்புடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து, தைவானுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதால் அவ்வபோது சீனா - அமெரிக்கா (China - US) இடையே வர்த்தக பாதிப்புகள் ஏற்படுவதும் உண்டு.
போர் விமானங்களை அனுப்பிய சீனா: கடந்த 2021ம் ஆண்டுக்கு பின் சீனா தைவான் விவகாரத்தில் நேரடியாக ஈடுபடாமல் இருந்தது. இந்நிலையில், தைவான் ஜலசந்தி பகுதியில் சீனா தனது 6 கடற்படை கப்பல், SU-30 போர் விமானம் உட்பட 33 விமானங்களை அனுப்பி மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இவை அனைத்தும் தைவானின் எல்லைக்குட்பட்ட பகுதிக்குள் பறந்து சென்றதால், சீனாவிடம் இருந்து வந்த எச்சரிக்கையாகவே கவனிக்கப்படுகிறது.
தைவானுக்கு ஆதரவாக தலையிடும் அமெரிக்கா: இதனால் தைவான் விவகாரத்தில் சீன அரசின் முடிவை அறிந்துகொண்ட அமெரிக்கா, தொடர்ந்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி இன்று அமெரிக்கா தலைமையில் சீனா - அமெரிக்கா அதிகாரிகள் தைவான் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். அமெரிக்கா தைவானை தனிநாடாக இருக்க அங்கீகரிக்க வேண்டும் என கூறும் வேளையில், சீனா தைவானை தனது நாட்டின் ஒரு அங்கம், தைவான் மாகாணம் என்ற வாதத்தை முன்வைக்கிறது. Kadayanallur Accident: சிமெண்ட் லாரி - கார் மோதி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து; 6 பேர் பரிதாப பலி.!
சீனா - அமெரிக்கா அதிபர்கள் சந்திப்பு: சீன அதிபர் ஜி ஜின்பிங் (Xi Xinping) மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி (Wang Yi) ஆகியோரும் உறுதி செய்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற ஆசிய - பசுபிக் கூட்டமைப்பு வர்த்தக மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) - சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் நேரில் சந்தித்தனர். இதற்கு 2 மாதங்கள் கழித்து நேற்று முன்தினம் தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காங் நகரில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் - சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்கி யியை நேரில் சந்தித்தார்.
சீனாவின் மீது பொருளாதார தடை: கடந்த காலங்களில் சீனா - அமெரிக்கா தைவான் விவகாரம் தொடர்பாக நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து, சீனாவும் தைவானை கைப்பற்ற நடவடிக்கை எடுத்தது. இதனால் சீனாவின் மீது அமெரிக்கா நேரடியாக பொருளாதார தடையை விதித்தது. இந்த பொருளாதார தடைகள் அனைத்தும் படிப்படியாக கொரோனா காலத்தில் நோய்பரவலை தடுக்க சீனா உண்மையான தகவலை பகிர வேண்டி நீக்கப்பட்டன. அன்று அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் ட்ரம்ப் செயல்பட்டு வந்தார்.
மீண்டும் தலைதூக்கும் விவகாரத்தால் உலகளாவிய பதற்றம்: இந்த நிலையில், மீண்டும் அமெரிக்கா - சீனா இடையே தைவான் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தைகள் தொடங்கவிருக்கின்றன. இதனால் உலகளாவிய பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடியாமல், சீனா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தால் அமெரிக்கா சீனாவுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடும் என்பதால், பொருளாதார பாதிப்புகள் உண்டாகலாம். சீனாவில் இருந்து பிற நாடுகளுக்கு நேரடி வணிக உறவுகள் வைக்கவும் அமெரிக்கா உலக நாடுகளுக்கு தடை விதிக்கும் என்பதால், அதுசார்ந்த பிரச்சனையும் ஏற்படும்.