ஜனவரி 28, கடையநல்லூர் (Tenkasi News): தென்காசி மாவட்டத்தில் உலா புளியங்குடி பகுதியை சேர்ந்தவர்கள், கார் ஒன்றில் குற்றாலம் அருவிக்கு நேற்று சென்று குளித்துவிட்டு, மீண்டும் தங்களின் காரில் சொந்த ஊர் திரும்பினர். இவர்களின் கார் கடையநல்லூர், சிங்கிலிபட்டி பகுதியில் வந்துகொண்டு இருந்தது. அப்போது, காரும் - அவ்வழியே சிமெண்ட் லாரி ஏற்றி தென்காசி நோக்கி பயணித்த லாரியும் நேருக்கு நேர் மோதி எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது. விபத்தில் காரில் பயணம் செய்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். Rangareddy Earthquake Today? தெலுங்கானா மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம்? உள்ளூர் மக்கள் அதிர்ச்சி தகவல்.! 

புளியங்குடியை சேர்ந்தவர்கள் பலி: தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், துரிதமாக செயல்பட்டு மீட்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையிலேயே இவர்கள் புளியங்குடியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், உறவினர்கள் தென்காசிக்கு விரைந்துள்ளனர். மேற்படி விபரங்கள் காவல் துறையினரால் சேகரிக்கப்பட்டு வருகிறது.

தொடரும் விபத்துகள்: தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து ஏற்படும்போது, அங்கு சென்று வரும் வாகனங்கள் விபத்திற்குள்ளாவது தொடர்கதையாக இருக்கிறது. குற்றாலம் அருவிகளில் நன்றாக குளித்துவிட்டு, உறங்க நேரம் எடுத்துக்கொள்ளாமல் அப்படியே வாகனங்களை இயக்கி வருவது பெரும்பாலும் விபத்திற்கு காரணமாக அமைவதாகவும் உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். அருவி போன்ற நீர்நிலைகளில் குளிக்கும்போது உடல் இயற்கையாகவே ஓய்வை தேடும். இவ்வாறான தருணத்தில் தொடர்ந்து ஓட்டுனரால் வாகனம் இயக்கப்படும்போது, எங்கோ ஒரு இடத்தில் உறக்க கலக்கத்தில் விபத்துகள் நடக்கின்றன.