China Military Exercises: தைவான் எல்லையில் போர்ப்பதற்றம்; சீனா தொடர்ந்து 2-வது நாளாக போர் ஒத்திகை..!
சீனா தனது நாட்டின் போர்க்கப்பல்கள், போர் விமானங்களை அனுப்பி தைவான் எல்லையில் போர்ப்பதற்றத்தை ஏற்படுத்துகின்றது.
மே 24, தைபே நகரம் (World News): தைவான் நாடு 1949-ஆம் ஆண்டு சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்து தனிநாடாக பிரிந்தது. இருந்தபோதிலும், தைவானை தங்களது நாட்டின் ஒரு பகுதியாக கருதுகிறது. இதனால், தைவான நாட்டை தனது நாட்டுடன் இணைத்துக் கொள்ள சீனா பல வழிகளில் மறைமுகமாக முயற்சித்து வருகின்றது. இதற்காக தைவான் எல்லையில் அடிக்கடி போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை அனுப்பி போர்பதற்றத்தை உருவாக்குகிறது. Bomb Threat: சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்; அதிகாரிகள் சோதனை தீவிரம்.!
இந்நிலையில், தைவானில் உள்ள கின்மென், மாட்சு மற்றும் டோங்கி ஆகிய தீவுகளை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து 2-வது நாளாக சீனா போர்ப்பயிற்சிகளில் (Military Exercises) ஈடுபட்டு வருகிறது. சீனாவின் இதுபோன்ற செயல்களுக்கு தைவான் நாட்டு அதிபர் லாய் சிங்-தே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், இத்தகைய செயல்பாடுகளில் இருந்து சீனா விலகி இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த சமயத்தில், தைவானின் பிரிவினைவாத நடவடிக்கைக்கு பதிலடியாக இந்த 2-ஆம் நாள் போர்ப்பயிற்சிகளை ஆரம்பித்துள்ளதாக சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ராணுவம், விமானப் படை, கடற்படை ஆகியவை ஈடுபட்டுள்ளன.