Air India Cancels All flights to Tel Aviv: விமான பயணம் செய்யவுள்ளோர் கவனத்திற்கு.. ஏர் இந்தியா நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு..!

மத்திய கிழக்கின் சில பகுதிகளில் தற்போது நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ஏர் இந்தியா நிறுவனம் டெல் அவிவ் செல்லும் அனைத்து விமானங்களையும் ரத்து செய்துள்ளது.

Air India Express (Photo Credit: Wikipedia Commons)

ஆகஸ்ட் 09, காசா (World News): மத்திய கிழக்கில் உள்ள இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் (Israel Hamas War) கடந்தாண்டு அக்டோபரிலிருந்து நடந்து வருகிறது. இந்த போரில் காசா தரப்பில் இதுவரை சுமார் 39 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே போரை நிறுத்துவது குறித்த பேச்சுவார்த்தைக்கு வருமாறு இஸ்ரேலுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதனை நிராகரித்து விட்டார். மேலும் 14 இலட்சத்துக்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்தனர். Perfume For Dogs: இனி உங்கள் நாயும் கமகமவென்று இருக்கும்.. நாய்களுக்கான வாசனை திரவியம் அறிமுகம்..!

ஏர் இந்தியா அறிவிப்பு: மத்திய கிழக்கின் சில பகுதிகளில் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, டெல் அவிவ் செல்லும் அனைத்து விமானங்களையும் ஏர் இந்தியா ரத்து செய்துள்ளது. இதுகுறித்து அவர்கள் எக்ஸ் தளத்தில், "மத்திய கிழக்கின் சில பகுதிகளின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, டெல் அவிவ் மற்றும் அங்கிருந்து புறப்படும் எங்கள் விமானங்களின் திட்டமிடப்பட்ட செயல்பாடு நிறுத்தப்பட்டுள்ளது. நாங்கள் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகிறோம், மேலும் டெல் அவிவ் மற்றும் அங்கிருந்து புறப்படுவதற்கான முன்பதிவு பயணிகளுக்கு முழுப் பணத்தையும் திருப்பித் தருகிறோம். பாதுகாப்பு எங்கள் முதன்மையான முன்னுரிமையாக உள்ளது. மேலும் தகவலுக்கு, எங்கள் 24/7 தொடர்பு மையத்தை 011-69329333 / 011-69329999 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.