Controversial British YouTuber: "இந்தியா மீது அணு ஆயுத குண்டு வீசுவேன்".. வீடியோ வெளியிட்ட சர்ச்சை யூடியூபர்..!

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த யூடியூபர் மைல்ஸ் ரூட்லெட்ஜ் சர்ச்சைக்குரிய வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

British YouTuber Miles Routledge (Photo Credit: @ameyaavlog73032 X)

ஆகஸ்ட் 23, பர்மிங்காம் (World News): பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த யூடியூபர் (British YouTuber) மைல்ஸ் ரூட்லெட்ஜ் (Miles Routledge) இந்தியாவைப் பற்றிய இனவெறிக் கருத்துக்களைத் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், அவர் இங்கிலாந்து பிரதமரானால் அந்த நாட்டின் மீது அணுகுண்டுகளை வீசுவேன் என்று நகைச்சுவையாகக் கூறியுள்ளார். அந்த வீடியோவில், "லார்ட் மைல்ஸ்" என்று அழைக்கப்படும் ரூட்லெட்ஜ் இங்கிலாந்தின் பிரதமராக வரும்போது, ​​பிரிட்டிஷ் நலன்களுக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு வெளிநாட்டு சக்திக்கும் எச்சரிக்கையாக அணு ஆயுதங்களைப் (Nuclear Threat) பயன்படுத்துவேன் என்று கூறினார். மேலும், முதலில் இந்தியாவில் இருந்து தொடங்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். பின்னர், இந்த கருத்தை அதிலிருந்து நீக்கினார். PM Modi on Ukraine: போர்ப்பதற்ற சூழ்நிலையில், உக்ரைன் மண்ணுக்கு சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி.!

இவர் கடந்த 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், ஆப்கானிஸ்தானுக்கு மூன்றாவது முறையாக பயணத்தைத் தொடங்கினார். அங்கு அவர் மற்ற பிரிட்டிஷ் குடிமக்களுடன் மார்ச் 02-ஆம் தேதி அன்று, தலிபானின் உளவுத்துறை பொது இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டார். இவர் கஜகஸ்தான், உகாண்டா, கென்யா, தெற்கு சூடான், உக்ரைன் மற்றும் பிரேசில் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள ஆபத்தான இடங்களுக்கு தொடர்ந்து பயணம் செய்தார். மேலும், சட்டவிரோதமாக எல்லைக் கடந்து சென்று, அடிக்கடி சிறைக்கு சென்று வந்துள்ளார். அவரது யூடியூபில் சர்ச்சையான கருத்துகளை பதிவிடுதல் போன்ற சர்ச்சைக்குரிய செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.  இதனால் இவரை 'ஆபத்தான சுற்றுலாப் பயணி' என பதிவு செய்தனர்.