Spain Flash Floods: ஸ்பெயின் பெருவெள்ளம் பாதிப்பு; பலி எண்ணிக்கை 205ஆக அதிகரிப்பு.. மக்கள் கடும் அவதி..!
ஸ்பெயினில் கனமழை-வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 205 ஆக அதிகரித்துள்ளது.
நவம்பர் 02, மாட்ரிட் (World News): ஸ்பெயினில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக அந்த நாட்டின் உயல்வா கடற்கரை பகுதியை ஒட்டியுள்ள மக்களுக்கு வானிலை மையம் சார்பில் கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். இருப்பினும், கடந்த அக்டோபர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் அங்கு பெய்த பெருமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு (Flood) ஏற்பட்டது. தற்போது, திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 205ஆக அதிகரித்துள்ளது. இன்னும் பலரைக் காணவில்லை. மோசமாக பாதிக்கப்பட்டுள்ள வலேன்சியா (Valencia) மாகாணம் முழுவதும் சேதம் ஏற்பட்டுள்ளது. Spain Flash Floods: கனமழை காரணமாக ஸ்பெயினில் திடீர் வெள்ளம்.. 155 பேர் பலி.!
கடும் பாதிப்பு:
அங்கு சாலைகளில் கார்கள் குவியலாகக் கிடக்கின்றன. இந்த கார் குவியல்களில் யாரேனும் சிக்கியிருக்கலாம், இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. வலேன்சியாவில் மட்டும் 202 பேர் உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களில் பெய்ய வேண்டிய மழை வெறும் 8 மணி நேரத்தில் கொட்டித் தீர்த்தது. அங்கு மின்சாரம் இல்லை, குடிநீர் இல்லை, உணவு இல்லை, மீட்புக் குழுவினர் செல்வதற்கு கூட சில பகுதிகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. வலேன்சியாவில் 80 கிலோ மீட்டர் நீளத்துக்கு ரயில்வே பாதை சேதமடைந்துள்ளது. 100 சாலைகள் மோசமாக சேதமடைந்துள்ளன.
கனமழை எச்சரிக்கை:
இந்நிலையில், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்கேஸ் மீட்பு, நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளார். மீட்புப் பணிகளில் 2000 ராணுவ வீரர்கள், 10 ராணுவ ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கடந்த 2 ஆண்டுகளாக கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்த ஸ்பெயின் மக்களை பெருமழை கடும் பாதிப்புக்குள்ளாக்கியது. இதற்கிடையில் வலேன்சியா, ஹூல்வா, காஸ்டெலான், மலோர்கா, கேட்டலோனியாவில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ஸ்பெயின் பெருவெள்ள பாதிப்பு: