Spain Flood (Photo Credit: @verydarkblackm X)

நவம்பர் 01, ஸ்பெயின் (World News): ஸ்பெயின் நாட்டின் வெலன்சியா மாகாணத்தில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வந்தது. இதனிடையே, கடந்த இரண்டு நாட்களாக அங்குள்ள வெவ்வேறு பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக, அங்குள்ள முக்கிய நதிகளில் வெள்ளம் ஆட்பறித்து கரைபுரண்டு ஓடியது. இதனால் கரையோரம் இருக்கும் நகரங்களில், கட்டிடங்களில் வெள்ளநீர் புகுந்தது. பல இடங்களில் நிலம் சரிந்து கட்டிடங்கள் மண்ணோடு மண்ணாகிப்போனது. சாலைகளில் இருந்த கார்கள் அடித்துச் செல்லப்பட்டது. மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். Israel Hamas War: இஸ்ரேல் – ஹமாஸ் போர்.. ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரான நயிம் குவாசம்..!

காவல்துறையினரும், மீட்புப் பணிகளும் ஹெலிகாப்டர்கள் மூலம் வீடுகள் மற்றும் கார்களில் சிக்கி இருந்த மக்களை மீட்டனர். இதனிடையே, தற்போது வரை அங்கு 115 பேர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பலர் மாயமாகி உள்ள காரணத்தால் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

திடீர் கனமழை & வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு: