Turkey Terror Attack: துருக்கியில் பயங்கரவாத தாக்குதல்; 5 பேர் பலி.. 22 பேர் படுகாயம்..!

துருக்கியில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 5 பேர் உயிரிழந்த நிலையில், 22 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

Turkey Terror Attack (Photo Credit: @ChaudharyParvez X)

அக்டோபர் 24, அங்காரா (World News): துருக்கியில் உள்ள ஏரோஸ்பேஸ் (Aerospace) விண்வெளி நிறுவனத்தின் தலைமையகத்திற்குள் புகுந்து தீவிரவாதிகள் திடீர் தாக்குதலை (Terror Attack) நடத்தியுள்ளனர். துருக்கி ராணுவத்துக்கு தேவையான போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் உள்ளிட்டவற்றை இந்த நிறுவனத்தில் தயாரித்து வருகின்றது. இது தலைநகர் அங்காராவில் (Ankara) புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளது. BRICS Summit 2024: ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாடு.. சீன அதிபரை 5 ஆண்டுகள் இடைவேளைக்கு பின் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி.!

தீவிரவாத தாக்குதல்:

இந்நிலையில், தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 22 பேர் படுகாயமடைந்தனர் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சர் யெரில்காயா தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலை ஆண் மற்றும் பெண் தீவிரவாதி என இருவர் நடத்தியுள்ளனர். உயிரிழந்தவர்களில் 2 பேர் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் என துருக்கி துணை அதிபர் செவ்டெட் யில்மா கூறியுள்ளார். குர்திஷ்தான் வொர்க்கர்ஸ் பார்ட்டியை சேர்ந்த ஆயுதம் ஏந்திய குழுவினரே இந்தத் தாக்குதலில் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

துருக்கி பதிலடி:

இதனால், துருக்கி ராணுவம் ஈராக் (Iran) மற்றும் சிரியாவில் (Syria) உள்ள குர்திஷ் இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்துள்ளது. துருக்கி தாக்குதலில் 30 பதுக்கிடங்கள் அழிக்கப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், அப்பாவி பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தாக்குதல் நடத்தப்பட்டதாக அறிவித்துள்ளது.

துருக்கி தீவிரவாத தாக்குதல்: