PM Narendra Modi & Xi (Photo Credit: @ANI X)

அக்டோபர் 24, கசான் (World News): பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, சீனா, ஈரான், சவூதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த கூட்டமைப்பின் 16வது உச்சி மாநாடு ரஷ்யா தலைமையில் அந்நாட்டின் கசான் (Kazan) நகரத்தில் அக்டோபர் 22, 23 நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டின் கருப்பொருள், ‘உலகளாவிய வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கான பலதரப்புவாதத்தை வலுப்படுத்துதல்’ ஆகும். இம்மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங், ஈரான் நாட்டின் அதிபர் மசூத் ரஜாவி உள்பட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில், பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா சென்றார். அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை அவர் சந்தித்து, உக்ரைன் போருக்கு சுமுக தீர்வு காண அனைத்து வகையிலும் உதவ இந்தியா தயாராக இருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்தார். BRICS Summit 2024: ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாடு.. ரஷ்ய அதிபர் புதினை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி.!

மேலும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். லடாக் பகுதியில் இருநாடுகளும் மோதலுக்கு தீர்வு காண்பதில் சீனாவும், இந்தியாவும் உடன்பாட்டை எட்டியுள்ளது. இந்த உடன்பாட்டுக்கு நடுவே இன்று பேச்சுவார்த்தை நடந்தது. இது 5 ஆண்டுகளுக்கு பிறகு இரு தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற முறையான இருதரப்பு பேச்சுவார்த்தை ஆகும். தொடர்ந்து, சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்தது குறித்து பிரதமர் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது, “உலகளாவிய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு இந்திய-சீன உறவுகள் மிக முக்கியம். பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதை இருதரப்பு உறவுகளை வழி நடத்தும்” என பதிவிட்டுள்ளார்.