Lightning Strike: கால்பந்தாட்டத்தில் குறுக்கே புகுந்த மின்னல்; பரிதாபமாக பறிபோன உயிர்.. பதறவைக்கும் காட்சி..!
பெரு நாட்டில் கால்பந்து போட்டியின்போது மின்னல் தாக்கியதில் கால்பந்து வீரர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் 06, சில்கா (World News): பெரு நாட்டின் (Peru) சில்கா மாவட்டத்தில் உள்ள ஹுவான்கேயோ பகுதியில் நேற்று முன்தினம் (நவம்பர் 04) பெல்லாவிஸ்டா - சோக்கா ஆகிய உள்ளூர் அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. சுமார் 22 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியில் 2-0 என்ற புள்ளி கணக்கில் பெல்லாவிஸ்டா அணி முன்னிலையில் இருந்தது. அப்போது, திடீரென மழை பெய்யத் தொடங்கியதால், போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, வீரர்கள் அனைவரும் மைதானத்தில் இருந்து வெளியே சென்றுக் கொண்டிருந்தனர். கடும் போட்டியில் டிரம்ப் வெற்றி சாத்தியமானது எப்படி?.. உலகமே உற்றுநோக்கிய அமெரிக்க அதிபர் தேர்தல்., விபரம் இதோ..!
அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு மின்னல் (Lightning) தாக்கியது. இதில் 39 வயதான கால்பந்து வீரர் ஜோஸ் ஹூகோ டிலா குரூஸ் மேசா (Jose Hugo de la Cruz Meza) என்பவர் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இவர் அருகில் சென்றுக் கொண்டிருந்த கோல் கீப்பர் ஜுவான் சோக்காவுக்கு பயங்கர தீக்காயங்கள் ஏற்பட்டது. இதனையடுத்து, அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
மேலும், எரிக் எஸ்டிவன் செசென்டே குய்லர், ஜோஷெப் குஸ்டாவோ பரியோனா சோக்கா மற்றும் கிறிஸ்டியன் சீசர் பிடுய் கஹுவானா ஆகிய 4 வீரர்களும் படுகாயமடைந்த நிலையில், அவர்களுக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
மின்னல் தாக்கி கால்பந்து வீரர் மரணம்: