Greece Approve Same Sex Marriage: கிரீஸ் நாட்டில் தன்பாலின ஈர்ப்பு திருமணத்திற்கு அங்கீகாரம்; நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றிய சட்டம்.!
இதற்கு ஆதரவும் - எதிர்ப்பும் கிளம்பி இருக்கிறது.
பிப்ரவரி 16, கிரீஸ் (World News): உலக அளவில் உள்ள 200க்கும் அதிகமான நாடுகளில், அந்தந்த நாடுகளுக்கு என தனித்தனியாக சட்டதிட்டங்கள், பாரம்பரிய-கலாச்சாரங்கள் இருந்து வருகின்றன. பல நாடுகளிலும் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் போன்றவற்றை கடைபிடித்து, எதிர்கால சந்ததிகளுக்கும் அவற்றை கொண்டு சேர்க்கவும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
தனிநபரின் குரலுக்கும் அரசு செவிசாய்க்கும்: நவநாகரீகம், தொழில்நுட்ப வளர்ச்சி, தனிநபர் விருப்பம் என ஒருபுறம் கலாச்சாரம் புதிய பரிணாம வளர்ச்சி அடைந்தாலும், சில நாடுகள் தங்களின் பாரம்பரிய விஷயத்தில் எவ்வித மீறலுக்கும் அனுமதி அளிப்பது இல்லை. ஒருசில நாடுகளில் தனிநபரின் விருப்பத்திற்கு ஒத்துழைப்பு அளித்து, அவர்களுக்கான அங்கீகாரம் வழங்கப்படுகிறது. Dehydration: நீர் கடுப்பு பிரச்சனையால் தொடர் அவதியா?.. காரணமும் - தீர்வு.. அசத்தல் டிப்ஸ் இதோ..!
ஓரினசேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம்: சமீபகாலமாகவே சர்வதேச அளவில் திருநங்கை மற்றும் ஓரின சேர்க்கையாளர்கள் அடங்கி எல்ஜிபிடிக்யூ (LGBTQ) தங்களது உரிமைகளுக்காக குரல் கொடுத்து சட்டபூர்வமான அதிகாரத்தையும் பெற்று வருகின்றனர். இந்நிலையில், கிருத்துவ மக்கள் அதிகம் வசித்து வரும் நாடுகளில் ஒன்றான கிரீஸ், பழமையான சடங்குகளை கடைபிடிக்கும் கிருத்துவ நாடுகளில் முதன்மையான ஒன்றாகும். தற்போது ஓரினசேர்க்கை திருமணத்தை சட்டபூர்வமாக அங்கீகரித்து இருக்கிறது.
நாடாளுமன்றத்தில் நிறைவேறிய சட்டம்: நேற்று கிரீஸ் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் ஓரினச்சேர்க்கை திருமணத்தை அங்கீகரிக்க 176 பேர் ஆதரவாக வாக்களித்தனர். 76 பேர் எதிராக வாக்களித்து நிலையில், பெரும்பான்மை பெற்ற நபர்களின் அடிப்படையில் ஒரே பாலின திருமணத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், தன்பாலின ஈர்ப்பாளர்கள் குழந்தைகளை தத்தெடுக்கவும் இந்த சட்டம் வழிவகை செய்துள்ளது. கிரீஸ் நாட்டுக்குள் இந்த சட்டத்திற்கு ஆதரவும் - எதிர்ப்பும் இருந்து வருகிறது.