Dehydration (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 16, சென்னை (Health Tips): பொதுவாக நீர் கடுப்பு இருக்கும்போது பலருக்கும் சிறுநீர் கழிக்கும் நேரத்தில் வலி, எரிச்சல், அசௌகரியம் போன்றவை ஏற்படும். இது ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு அதிகம் ஏற்படும். நீர் கடுப்பு சிறுநீர் பாதை, சிறுநீர்ப்பை, சிறுநீர் குழாய் தொற்று, சிறுநீர் கற்கள், மருந்துகளின் பக்க விளைவு, புற்றுநோய்க்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை, சிறுநீர்ப்பை, புற்றுநோய், சோப்பு உட்பட பிற பொருள்களில் இருக்கும் ரசாயனங்களால் ஏற்படும் தீங்கு காரணமாக சிறுநீர் கடுப்பு ஏற்படுகிறது. Vaani Kapoor: "தலைப்பு வேண்டாம், வைப் பண்ணுங்க" - ரசிகர்களுக்காக அல்டிமேட் கவர்ச்சி போட்டோவை வெளியிட்ட நடிகை.! 

சாப்பிட வேண்டியவை: இதற்கு சரியான தீர்வாக நாம் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் மூன்று முதல் நான்கு லிட்டர் நீர் குடிப்பது நல்லது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் இஞ்சி, ஏலக்காய், வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு உட்பட பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடுதல் போன்றவை வேண்டும். இவற்றை கட்டாயம் வாரத்தில் 3 முதல் நான்கு நாட்களாகவாது எடுத்துக்கொள்ள வேண்டும். Fans Celebrate Siren Movie: ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்க்க மதுரை வந்த நடிகர் ஜெயம் ரவி; உற்சாக வரவேற்பு..! 

தவிர்க்க வேண்டியவை: அதேவேளையில் அதிக காரத்தன்மை கொண்ட உணவுகள், அமிலத்தன்மை கொண்ட உணவுகள், துரித உணவுகள், செயற்கை குளிர்பானங்கள், மதுபானங்கள் ஆகிவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும். சிறுநீர் பாதை தொற்றுக்கு பாக்டீரியா காரணமாக இருக்கும் பட்சத்தில், கட்டாயம் மருத்துவரை சந்தித்து அதற்கான சிகிச்சைகளை எடுத்துக் கொள்வது நல்லது. சிறுநீர் கடுப்பு உடல் வெப்பம் தணிந்ததும் சரியாகும் எனினும், தொடர்ந்து சிறுநீர் கடுப்பு உணரப்பட்டால் மருத்துவரை நாடுவது நல்லது.

நீரே அருமருந்து