Haiti PM Resign: எதிர்ப்பு குழுவின் மிரட்டல், அரசியல் குழப்பம் எதிரொலி: ஹைதி நாட்டின் பிரதமர் ராஜினாமா..!
கடந்த 2021ம் ஆண்டு பிரதமர் கொலை செய்யப்பட்ட பின்னரில் இருந்து தற்போது வரை ஹைதி நாட்டை நிர்வகித்து வந்த ஹென்றி, தனது பிரதமர் பொறுப்பில் இருந்து விலகி இருக்கிறார்.
மார்ச் 12, போர்ட்-அவு-பிரின்ஸ் (World News): வட அமெரிக்காவில் உள்ள கரீபியன் தீவுகள் நாடுகளில் குறிப்பிடத்தக்கது ஹைதி (Haiti). 1.14 கோடி மக்கள் தொகை கொண்ட கரீபிய தீவுக்கூட்ட நாடுகளில் ஒன்றான ஹைதி, கடந்த 2010ம் ஆண்டு ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கத்தினால் 2 இலட்சத்திற்கும் அதிகமான மக்களை பலிகொடுத்தது. பல வீடுகள் இடிந்து தரைமட்டமாகி, பொருளாதார ரீதியான சீரழிவு ஏற்பட்டது. அதன் தாக்கத்தில் இருந்து தற்போது வரை அந்நாடு மீண்டு வர போராடி வருகிறது.
உள்நாட்டு பிரச்சனை: அமெரிக்கா மற்றும் அதன் நெருங்கிய நட்பு நாடுகளின் உதவியுடன் செயல்பட்டு வரும் ஹவுதி அரசு, சுற்றுலாத்துறையை பெருக்கி இருப்பதால் சுற்றுலா வருவாய் என்பது அங்கு முதன்மையாக கருதப்படுகிறது. அங்குள்ள பல தீவுகளை சுற்றுலா மையங்களாக மாற்றி இருக்கின்றனர். எனினும், ஹைதியில் உள்நாட்டு பிரச்சனை, இருவேறு கும்பலாக பிரிந்து வன்முறை சம்பவத்தில் ஈடுபடும் மக்கள் என தொடர் அழிவு சம்பவங்கள் நடைபெறுகின்றன. CAA Rules PDF Download: இந்தியாவில் அமலானது சிஏஏ சட்டம்; முழு விபரத்தை தெரிந்துகொள்வது எப்படி?.. விபரம் இதோ.!
பிரதமர் கொலை: கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் அந்நாட்டின் பிரதமராக பணியாற்றி வந்த ஜோவெனல் மோஸ் (Jovenel Moïse) சுட்டுக்கொல்லப்பட்டார். அதனைத்தொடர்ந்து, ஹைதியின் பிரதமராக ஏரியல் ஹென்றி (Ariel Henry) தேர்வு செய்யப்பட்டு அரசை வழிநடத்தி வந்தார். அவருக்கு எதிராக தொடர்ந்து வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த உள்ளூர் எதிர்ப்புக்குழு, அவர் பதவி விலக வேண்டும் என கொலை மிரட்டலும் விடுத்தது வந்தது.
பதவி ராஜினாமா: இந்நிலையில், ஹைதியின் பிரதமர் ஏரியல் ஹென்றி பதவி விலகுவதாக அறிவித்து ராஜினாமா செய்துள்ளார். இதற்கு முன்பு தான் ஜமைக்காவில் நடைபெற்ற விவாத நிகழ்வில் உள்நாட்டு கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.