CAA Act 2024 (Photo Credit: @DhivCM / @girivsk X)

மார்ச் 11, புதுடெல்லி (New Delhi): கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் வெற்றிபெற்று, மத்தியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை தக்க வைத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு, கடந்த 2019ம் குடியுரிமை சட்டதிருத்தத்தை (Citizen Amendment Act CAA) நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்து, அதனை பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றியது. இதனையடுத்து, சட்டம் இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட நிலையில், சட்டத்திற்கு ஆதரவு - எதிர்ப்பு என்பது நிலவியது.

குடியுரிமை திருத்த சட்டம் அமல்: சட்டம் அமல்படுத்தப்பட தேவையான முயற்சிகளை மேற்கொள்ளும்போது நிலவிய கடும் எதிர்ப்பு போராட்டம், பின்னாளில் கைவிடப்பட்டது. இந்நிலையில், இன்று காலை முதலாக குடியுரிமை திருத்தச்சட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படலாம் என்ற அரசுத்துறை தகவல்கள் தெரிவித்தன. அதனை உறுதி செய்யும்பொருட்டு, மத்திய உள்துறை அமைச்சகம் இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தி உத்தரவிட்டு இருக்கிறது. Central Govt Notifies CAA Rules: நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் அமல்… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..! 

புலம்பெயர்ந்த குறிப்பிட்ட தரப்பு மக்களுக்கு அனுமதி: இந்த சட்டத்தின் வாயிலாக பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதரீதியான துன்புறுத்தலை எதிர்கொண்டு, கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்கு முன் வரை இந்தியாவிற்கு வருகைதந்த இந்துக்கள், கிறித்துவர்கள், சீக்கியர்கள், ஜெயின் மற்றும் பவுத்த சமூகத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்க சட்டம் வழிவகை செய்கிறது.

பின்வாங்க இயலாது என அறிவிப்பு: கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சிஏஏ சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று இருப்பினும், மத்திய அரசு சிஏஏ சட்டதிருத்தத்தை அமல்படுத்த முழுவீச்சில் செயல்பட்டு வந்தது. மேலும், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் நாட்டு மக்களின் நலனுக்கான அரசாக செயல்படும் மத்திய அரசு அறிமுகம் செய்த சிஏஏ சட்டதிருத்தத்தில் எவ்வித பின்வாங்கல் நடவடிக்கைக்கும் வாய்ப்பில்லை என்றும் தெரிவித்து இருந்தனர்.

வாக்குறுதியை நிறைவேற்றிய பிரதமர்: இந்நிலையில் தான் மார்ச் 11 அன்று இந்தியா முழுவதும் குடியுரிமை திருத்தச்சட்டம் என்பது அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த சட்டத்தின் வரைவுகளை விரிவாக தெரிந்துகொள்ள கீழுள்ள பிடிஎப் பக்கத்தை பார்க்கவும். அதற்கான இணைப்புக்கு இங்கே அழுத்தவும்: https://egazette.gov.in/WriteReadData/2024/252847.pdf (ஆங்கிலத்தில் அறிவிப்பை படிக்க 29ம் பக்கத்திற்கு செல்க). மேற்கூறிய சட்ட அறிமுகத்தை தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் குறிப்பிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குடியுரிமை சட்டதிருத்தத்தை அறிமுகம் செய்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.