IPL Auction 2025 Live

Hawaii Kīlauea Volcano Eruption: மீண்டும் வெடிக்க தயாராகும் ஹவாய் எரிமலை?.. தண்ணீரை போல பீய்ச்சி அடிக்கப்படும் எரிமலைக்குழம்பு..!

ஒருசில எரிமலைகள் அவ்வப்போது குமுறி தனது ஆவேசத்தை வெளிப்படுத்தி வருகிறது. இயற்கையின் முன் அனைவரும் சமம் என்பதே இயற்கையின் சாராம்சமாக இருக்கிறது.

ஹவாயில் உள்ள கிலாயே எரிமலை சீறும் காட்சி (Photo Credit: Twitter)

செப்டம்பர் 11, ஹவாய் (Hawaii, United States): பூமியை 7 கண்டமாகவும், பல நாடுகளாகவும் நாம் பிரித்து வைத்திருக்கிறோம். ஆனால், இயற்கை நம்மை பூமிக்கடியில் இருந்து நிலநடுத்தட்டுகள் வழியே பிரித்து வைத்துள்ளது. இந்த நிலநடுத்தட்டுகள் வழியே அவ்வப்போது பூமிக்கடியில் அமைதியாக உறங்கிக்கொண்டு இருக்கும் எரிமலை வெளிப்படும்.

சில இடங்களில் அதன் வெளிப்பாடு பல யுகங்களாக தொடர்ந்து, இன்றளவும் அவை சூடான பகுதியாக இருக்கின்றன. ஒருசில நேரம் எரிமலை வெடிப்புகள் நிகழவும் செய்கின்றன. இயற்கையின் விஷயத்தில் அனைவரும் சமம் என்பதை அவ்வப்போது இயற்கை மனிதருக்கு உணர்த்தி வருகிறது.

சர்வதேச அளவில் இந்தோனேஷியாவின் ஜாவா மொராபி எரிமலை, பாலியின் படுர் எரிமலை, பப்புவா நியூ கினியாவின் ரபையுள் கால்டேரா எரிமலை, பிலிப்பைன்சின் பினாடியூபா எரிமலை, மவுண்ட் கேன்லன் எரிமலை, பூளுசன் எரிமலை, பார்க்கர் எரிமலை, ஹவாயில் கிலாவியா எரிமலை இன்னும் எப்போதும் வெடிக்கும் திறனுடன் இருக்கின்றன. Tigers Dead Emerald Dam: உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட 2 புலிகள்; தீவிர விசாரணையில் வனத்துறை.! 

இவை வெடிக்காமல் இருக்க மனிதனால் எதுவம் செய்ய இயலாது என்றாலும், அதனால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க இயலும். இவ்வாறான பகுதிகளில் வசித்து வரும் மக்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க அரசு எப்போதும் தயாராக இருக்கும்.

இந்நிலையில், பூமியில் சுறுசுறுப்பான எரிமலைகளில் ஒன்றாக காணப்படும் ஹவாயில் கிலாவியா எரிமலை (Kīlauea Volcano, Hawaii), மீண்டும் வெடிப்பதற்கு தயாராகி வருவதாக தெரியவருகிறது. இந்த எரிமலை தரையில் தனது நெருப்பு குழம்புகளை தண்ணீர் போல பீய்ச்சி அடிக்கும் அதிர்ச்சி வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

ஹவாயை பொறுத்தமட்டில் அது எரிமலையால் உருவானது என ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. முதலில் எரிமலை குழம்புகள் கடலின் ஆழத்தில் இருந்து தனது குழம்புகளை வெளியிட்டு, பின் குளிர்ந்து மலை உண்டாயின. பறவைகளின் வருகை, மழை, காற்று என எரிமலையால் கருநிறத்தில் இருந்த ஹவாய் தீவுகளில் அனைத்தும் செழிக்கத்தொடங்கியது. ஆனாலும், அங்கு கடலுக்கடியில் எரிமலைகள் இன்றளவும் தனது குழம்புகளை வெளியிட்டு குளிர்ந்து வருகின்றன.

சமீபத்தில் ஹவாய் தீவுகள் காட்டுத்தீயில் சிக்கி சின்னாபின்னமானது குறிப்பிடத்தக்கது.