Houthis Footage about Hijack Cargo Ship: வணிக கப்பலை கடத்தியது எப்படி?.. வீடியோ வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்த ஹவுதி பயங்கரவாதிகள்..! லிங்க் உள்ளே.!
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் செயல்பட்டுள்ள ஹவுதி பயங்கரவாதிகள் குழு, துருக்கியில் இருந்து இந்தியா புறப்பட்ட ஜப்பானிய வணிககப்பலை கடத்தி இருக்கிறது.
நவம்பர் 21, ஏமன் (World News): அக்.07ம் தேதி தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு இடையேயான போரினால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. தொலைதூரத்தில் இருந்து வந்துள்ள அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆதரவாக ஆயுதங்கள் வழங்குகிறது.
இதனால் மத்திய கிழக்கில் உள்ள ஈரான் உட்பட பிற நாடுகள், நேரடியாகவும்-மறைமுகமாகவும் பாலஸ்தீனிய ஆதரவு ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களை வழங்கி உதவி செய்கிறது வருகிறது. அமெரிக்காவின் நிலைகள் தாக்கப்பட்டாலோ அல்லது அமெரிக்கா போருக்குள் நேரடியாக இறங்கினாலோ உலகப்போர் ஏற்படும் அபாயமும் உள்ளது. David Warner Apologize to the Indian Fans: மிட்செல்லின் செயலுக்கு பகிரங்க மன்னிப்புக்கேட்ட ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர்.. விபரம் இதோ.!
இது மத்திய கிழக்கு நாடுகளை உலக நாடுகள் தொடர்ந்து கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டிய சூழ்நிலையை உருவாகிவிட்டது. போரை சுமூகமாக முடிக்கவும் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொளுந்துவிட்டு எரியும் போரில் எண்ணெய் ஊற்றுவது போன்ற செயலை ஹவுதி கையில் எடுத்துள்ளது.
ஈரான் ஆதரவு பெற்ற ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், ஹெலிகாப்டரில் வந்து செங்கடலில் துருக்கியில் இருந்து இந்தியா நோக்கி பயணம் செய்த சரக்கு கப்பலை கைப்பற்றி, அதனை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, கப்பல் பணியாளர்களை பிணையக்கைதிகளாக்கியுள்ளனர்.
இவர்கள் ஹெலிகாப்டரில் வந்து கப்பலை கைப்பற்றியது எப்படி என்பதற்கு ஆதாரமாக காணொளியையும் பதிவு செய்து வெளியேற்றி இருக்கின்றனர். அதிநவீன துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் சரக்கு கப்பலை பயங்கரவாதிகள் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.