David Warner (Photo Credit: X)

நவம்பர் 21, அகமதாபாத் (Sports News): ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட்த்தொடர் 2023, குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி, தொடர்ந்து 45 நாட்கள் ஆட்டத்திற்கு பின் நவ.19 அன்று நிறைவுபெற்றது.

இறுதிஆட்டத்தில் புள்ளிப்பட்டியல் மற்றும் அரையிறுதி தகுதிச்சுற்றில் முன்னேறி இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முடிவில் இந்தியா நடப்பு உலகக்கோப்பை 2023 தொடரில் முதல் தோல்வியை அடைந்து, ஆஸ்திரேலியா 50 ஓவர் கொண்ட ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை 2023-ஐ வென்றது.

இதனையடுத்து, ஆஸ்திரேலியா 6வது முறையாக உலகக்கோப்பையை தனதாக்கியது. இந்தியாவின் தோல்வி கிரிக்கெட் ரசிகர்களால் இன்று வரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தொடர் மனவருத்தத்தில் கிரிக்கெட்டை உயிராக ரசித்தவர்கள் இருக்கின்றனர். Kids Accidentally Drinks Poison: விஷத்தை தூக்கிவந்து வீட்டில் போட்ட குரங்கு: குளிர்பானம் என நினைத்ததால் நேர்ந்த சோகம்.. 2 வயது குழந்தை பலி.! 

Tarvis Head | Team AUS | ICC CWC 2023 Final (Photo Credit: X)

இந்நிலையில், கோப்பையை பெற்ற மகிழ்ச்சியில் ஆஸி., அணியின் வீரர் மிட்செல் உலகக்கோப்பை மீது கால்களை வைத்து இருந்த புகைப்படம் வெளியாகி, இந்திய ரசிகர்களிடையே கடும் கண்டனத்தை பெற்று வந்தது. இதற்கு ஆஸி., அணியின் வீரர் டேவிட் வார்னர் தனது மன்னிப்பை கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், இது ஒரு சிறந்த விளையாட்டு. இறுதி சூழ்நிலை நம்பமுடியாததாக இருந்தது. உங்கள் அனைவருக்கும் நன்றி" என தெரிவித்துள்ளார்.

டேவிட் வார்னர் இந்திய மக்களின் மீது கொள்ளை பிரியம் கொண்டவர் ஆவார். அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்திய பாடல்களுக்கு குடும்பத்துடன் சேர்ந்து நடனம் ஆடி வீடியோ வெளியிடுவார்.