Workers Beaten by Employer: தொழிலாளிகளை சாட்டையால் அடித்து துன்புறுத்திய முதலாளி.. தொழிலாளர் தின கொண்டாட்டம் முடிவதற்குள் பரபரப்பு; அதிர்ச்சி காட்சிகள் லீக்.!
முதலீடுகளை கொடுத்து கொள்ளை இலாபம் சம்பாதிக்கும் முதலாளிகள், அவர்களுக்கு இலாபத்தை வழங்க காரணகர்த்தாவாக இருக்கும் தொழிலாளிகளை மதிக்காமல் மிதித்தெடுத்த சம்பவம் ஆப்ரிக்காவில் நடந்துள்ளது.
மே 03, ஆப்ரிக்கா (World News): ஆப்பிரிக்காவில் உள்ள பல நாடுகளில் நிலையற்ற அரசியல், பயங்கரவாத தாக்குதல், வறட்சி போன்ற பல்வேறு பிரச்சனைகளின் காரணமாக வேலையின்மை, பொருளாதார பிரச்சனை என பல துயரத்தை அங்குள்ள மக்கள் சந்தித்து வருகின்றனர். இதனால் கிடைத்த வேலைகளை அடிமைகள் போல தொடர்ந்து செய்து தங்களின் குடும்பத்தை கவனிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.
ஆப்ரிக்காவின் வளங்களை சுரண்டும் முதலீடுகள்: ஆப்பிரிக்க நாடுகளில் முதலீடு செய்துள்ள வெளிநாடுகளை சேர்ந்த நிறுவனங்கள், அங்குள்ள உள்ளூர் மக்களை ஊழியர்களாக பயன்படுத்தினாலும் அவர்களுக்கு சரியான ஊழியம் வழங்கப்படுவது இல்லை. குறைவான ஊதியத்தில் அவர்களுக்கு வேலைகளை வழங்கி, அதன்பேரில் கொள்ளை இலாபம் சம்பாதித்தும் வருகின்றன. இந்நிலையில், முதலாளி ஒருவர் தனது தொழிலாளிகளை தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. China Highway Collapse: திடீரென இடிந்து விழுந்த நெடுஞ்சாலை.. 36 பேர் பரிதாப பலி..!
தொழிலாளியை ட்ரான்ஸ் அட்லாண்டிக் ஸ்லாவ்ஸ் (Trans Atlantic Slaves) படம்போல தாக்கி கொடுமை: சீனாவை சேர்ந்த முதலாளி ஒருவர் ஆப்ரிக்காவில் தனது தொழிலாளர்களை சாட்டையால் கடுமையாக தாக்கி இருக்கிறார். இதுகுறித்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது? என்ற விபரம் இல்லை. நமக்கு கிடைத்த தகவலின்படி, வீடியோ சீன டெலக்ராம் குழுவில் பகிரப்பட்டு இருக்கிறது. அதனை பார்த்த சீனர்கள் பலரும் இனவெறியுடன் செயல்பட்டு அதில் சிரிக்கும் எமோஜியை பயன்படுத்தி கருத்தை பகிர்ந்துள்ளார். ஒருசிலர் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து இருக்கின்றனர்.
வேதனையை வெளிப்படுத்தும் நெட்டிசன்கள்: சீனா நாட்டை பொறுத்தமட்டில், அதன் நிறுவனங்கள் வெளிநாட்டில் முதலீடு செய்து பல சுரண்டலை செய்து வருகின்றன. இந்தியாவிலும் அதே வேலையை செய்து வந்த பல செயலிகள் அதிரடியாக மத்திய அரசால் நீக்கப்பட்டன. இந்தியர்களின் தகவலை உளவுபார்த்ததாக டிக் டாக் செயலியும் முடக்கப்பட்டது. உலகளவில் மிகப்பெரிய வல்லரசு வளர்ச்சி நாடுகளில் இடம்பெற்றுள்ள இந்தியாவிலேயே சீன நிறுவனங்களின் அடாவடி அதிகம் என்றால், கேட்பாரற்று கிடைக்கும் ஆப்ரிக்காவின் நிலை வருத்தம் தான் என பலரும் வேதனை தெரிவிக்கின்றனர்.