மே 02, குவாங்டாங் (World News): தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த வரலாறு காணாத கன மழையால் சாலைகளில் வெள்ளம் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. Singer Uma Ramanan Passes Away: தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகி உமா ரமணன் மறைவு.. ரசிகர்கள் இரங்கல்..! 

இந்நிலையில் சாலையில் ஓடிய மழைநீரால் மெய்சூ நகருக்கும் டபு கவுன்ட்டிக்கும் இடையே நெடுஞ்சாலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது (Highway Collapse). மலைப் பகுதியில் சுமார் 18 மீட்டர் நீளத்துக்கு சாலை இடிந்து விழுந்தது. இதில் 18 கார்கள் அதில் சரிந்து உருண்டோடின. இந்த விபத்தில் 36 பேர் உயிரிழந்ததோடு சுமார் 30 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.