H1N1 Bird Flu: அமெரிக்காவில் அதிர்ச்சி; பறவைக்காய்ச்சலால் கண்கள் குருடாகி உயிரிழந்த 24 பூனைகள்.. ஆய்வில் பதறவைக்கும் தகவல்.!
மாட்டுப்பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட பால்களை குடித்த பூனைகள் அடுத்தடுத்து பறவைக்காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழந்தது அமெரிக்காவில் நடந்துள்ளது.
மே 01, டெக்சர்ஸ் (World News): அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் பகுதிகள் செயல்பட்டு வரும் மாட்டு பண்ணைகளில், நாடுகளிடம் இருந்து எடுக்கப்பட்ட நேரடியான பால்களை குடித்த பூனைகள் அடுத்தடுத்து பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குருட்டுத்தன்மை மற்றும் பிற உடல்நல பாதிப்புகளால் உயிரிழந்தது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குருட்டுத்தன்மை உட்பட பிற உடல்நல பாதிப்புகள்: அமெரிக்காவின் நோய்கள் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் டெக்சாஸில் இருக்கும் பூனைகள் உயிரிழந்த விவகாரத்தில் மேற்கொண்ட ஆய்வில், அவை எச்5 என்1 எனப்படும் பறவை காய்ச்சலால் உயிரிழந்ததை உறுதி செய்துள்ளனர். கிட்டத்தட்ட 24 பூனைகள் இதனால் மரணம் அடைந்துள்ளன. இவை இறப்பதற்கு முன்பு மனநல பாதிப்பு, விறைப்பு பிரச்சனை, உடல் சக்தி இழப்பு, குருட்டுத்தன்மை, அதிகப்படியான சளி வெளியேற்றம் போன்ற விஷயத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. Trichy Shocker: அண்ணன் - தம்பி சொத்து தகராறில் அடுத்ததடுத்து அரங்கேறும் கொலைகள்; திருச்சியை அதிரவைக்கும் பயங்கரம்.!
பண்ணைகளில் நோய்தடுப்பு நடவடிக்கை தீவிரம்: பூனைகளை பாதித்த பறவை காய்ச்சல் அதன் நுரையீரல், மூளை, இதயம், கண்கள் ஆகிய உறுப்புகளையும் செயலிழக்க வைத்துள்ளது. இது மனிதத் தொற்றாக மாறுவதற்கு சாத்தியமில்லை எனினும், விலங்குகளிடையே அதிகம் பரவும் என்பதால் கவனமாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள பல பண்ணைகளுக்கும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அங்குள்ள எட்டு மாநிலங்களில், 29 பண்ணைகளில் இது சார்ந்த சோதனைகள் நடைபெற்று வருகின்றன. தற்போது பறவைக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள காரணத்தால், பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை தொடருகிறது.