![](https://static.latestly.com/File-upload-v3/o/p/4NqciJt1B8gIsZFwY23kB10uvfvtKQdVvjUutMrKYPj3e6kq5VzARfRWM---ndIi/n/bmd8qrbo34g7/b/File-upload-v3/o/upload-test-dev/uploads/1714541221Trichy%2520Ariyamangalam%2520Murder%2520%2528Photo%2520Credit%2520%2540Venkate67349934%2520X%2529-380x214.jpg)
மே 01, அரியமங்கலம் (Trichy News): திருச்சி மாவட்டத்தில் உள்ள அரியமங்கலம், திடீர் நகர் பகுதியில் வசித்து வருபவர் கேபிள் சேகர். இவர் முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஆவார். சேகரின் மனைவி கயல்விழி. இவரும் அதிமுக கவுன்சிலராக பணியாற்றி இருக்கிறார்கள். தம்பதிகளுக்கு முத்துக்குமார், இளவரசன் என இரண்டு மகன்கள் இருக்கின்றனர். சேகரின் சகோதரர் பெரியசாமி, இவருக்கு தங்கமணி, சிலம்பரசன், லோகநாதன் என மூன்று மகன்கள் இருக்கின்றனர். இவர்களில் இரண்டு சகோதரர்கள் ஒற்றுமையாக பன்றி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர்.
தலைமுறை இடையே தொடர்ந்த சொத்து தகராறு: இதனிடையே பெரியசாமி இயற்கையை எழுதிய காரணத்தால், அவரது தொழில் அனைத்தும் சேகர் மற்றும் அவரது இரண்டு மகன்கள் கவனிப்பில் நடந்து வந்துள்ளது. இது குறித்து சேகரிடம் பெரியசாமியின் மகன்கள் தங்களுக்கு உரிய சொத்தை பிரித்துக் கொடுக்கக்கூறி பலமுறை கேட்டுள்ளனர். ஆனால், அது சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் இருவருக்கும் இடையே தகராறு நடைபெற்று வந்துள்ளது. HBD Ajith Kumar: தனக்கென தனி வழியை உருவாக்கிய தன்னிகரில்லா நாயகன்; தல அஜித் குமாருக்கு இன்று பிறந்தநாள்.!
பழிக்குப்பழியாக நடக்கும் பயங்கரம்: இந்த தகராறு ஒரு கட்டத்தில் விரோதமாக மாற, தங்கமணி மற்றும் சிலம்பரசன் சேர்ந்து தங்களது நண்பருடன் 2011 ஆம் ஆண்டு சேகரை கொடூரமாக வெட்டிப்படுகொலை செய்தனர். அதனைத்தொடர்ந்து, 2021 ஆம் ஆண்டு முத்துக்குமார் தரப்பினர், தனது தந்தையை வெட்டிப்படுகொலை செய்த சிலம்பரசனை கொலை செய்ய திட்டமிட்டு, பழிக்குப்பழியாக வீட்டின் பின்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் வைத்து அவரைப் போட்டுத் தள்ளினர். இரண்டு குடும்பங்களிடையே இருந்து வந்த முன்விரோதம் தொடர்ந்து வந்துள்ளது.
ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை: இந்த விவகாரத்தில் முத்துக்குமார் (வயது 28) என்பவரின் மீது பல வழக்குகளும் நிலுவையில் இருக்கின்றன. இந்நிலையில், சம்பவத்தன்று அவர் தனது வீட்டில் உள்ள மின்மோட்டாரை பழுது நீக்கம் செய்து இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்துள்ளார். அப்போது, தஞ்சாவூர் - திருச்சி நெடுஞ்சாலையில் லோகநாதன் தரப்பினர் அவரை வழிமறித்து இருக்கின்றனர். தன்னை கொலை செய்ய வருகிறார்கள் என்பதை உணர்ந்து கொண்ட முத்துக்குமார் தப்பியோட முயற்சித்தாலும், லோகநாதன் மற்றும் அவரது கூட்டாளிகள் அவரை ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை செய்தனர்.
இருவர் கைது, குற்றவாளிகளுக்கு வலைவீச்சு: இந்த சம்பவத்தில் நிகழ்விடத்திலேயே முத்துக்குமார் உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், முத்துக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அரியமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இளஞ்செழியன் மற்றும் லோகநாதன் ஆகியோரை முதற்கட்டமாக கைது செய்துள்ளனர். தப்பியோடிய நல்லவர் கும்பலுக்கு வலைவீசப்பட்டுள்ளது.
திருச்சி அரியமங்கலம் அதிமுக முன்னாள் கவுன்சிலரின் மகன் பட்டப் பகலில் கொடூரமாக வெட்டி கொலை. அரியமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே முத்துக்குமார் என்பவர் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை.. 😢😢
சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை.
துப்பாக்கி மற்றும் pic.twitter.com/sq7EtNg35o
— Venkatesan (@Venkate67349934) April 30, 2024