IPL Auction 2025 Live

Bird Flu Kills 1000 Penguins: கொத்துக்கொத்தாக ஆயிரத்திற்கும் அதிகமான உயிர்கள் பலி.. உலகை அச்சுறுத்தும் எச்5என்1 பறவைக்காய்ச்சல்.!

2022ல் அமெரிக்காவில் உறுதி செய்யப்பட்டு, சமீபத்தில் தாய்லாந்து நாட்டில் பரவியதாக அறிவிக்கப்பட்ட பறவைக்காய்ச்சல் அண்டார்டிகாவில் பெரிய அளவிலான உயிர்பலியை ஏற்றுக்கொண்டுள்ளது.

Penguin (Photo Credit: Wikipedia)

ஏப்ரல் 05, அண்டார்டிகா (World News): சர்வதேச அளவில் தற்போது பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ள எச்5என்1 பறவைக்காய்ச்சல், கொத்துக்கொத்தாக பறவையினங்களை கொன்று குவித்து வருகிறது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கடந்த மாதம் மட்டும் 532 பென்குயின்கள் (Penguins Dies by Bird Flu) இதனால் மரணமடைந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

பறவைக்காய்ச்சலுக்கு பென்குயின்கள் பலி: இந்நிலையில், பறவை காய்ச்சல் வைரசால் பாதிக்கப்பட்ட ஆயிரம் பென்குயின்கள் அண்டார்டிக் பகுதியில் இறந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் தென் அமெரிக்காவிலிருந்து உலக அளவில் பரவியதாக கருதப்படும் பறவைக்காய்ச்சல், தற்போது பென்குயின்களை குறி வைத்து இருக்கிறது. GT vs PBKS Highlights: அடித்து நொறுக்கிய சஷாங் சிங்; ஒற்றை ஆளாய் மைதானத்தை மிரளவிட்ட பஞ்சாப் கிங்கிசின் நாயகன்.! 

கடல் பறவைகள் மற்றும் பிற உயிரினங்களுக்கும் பலியானது உறுதி: ஏற்கனவே பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் வனவிலங்குகள், தற்போது வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பது சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் வியட்நாமில் பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவியதாகவும் உதவி செய்யப்பட்டது. அண்டார்டிக் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் பறவை காய்ச்சலால் பென்குயின்கள் மட்டுமல்லாது கடல் பறவைகள் போன்றவையும் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் 20 மில்லியன் ஜோடி பென்குயின்கள் அண்டார்டிக் பகுதியில் இனப்பெருக்கம் செய்யும் நிலையில், தற்போது இது தொடர்பான மரணங்கள் அதன் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி உள்ளது.