ஏப்ரல் 05, அகமதாபாத் (Cricket News): ஐபிஎல் 2024 தொடரில் 17 ஆவது ஆட்டம் (IPL 2024), நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து இரவு 07:30 மணியளவில் தொடங்கி நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் - பஞ்சாப் கிங்ஸ் (GT Vs PBKS) அணியும் மோதிக்கொண்டன. ஆட்டத்தின் தொடக்கத்தில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியின் சார்பில் விளையாடிய ஷுபனம் ஹில் 48 பந்துகளில் 89 ரன்கள் அதிகபட்சமாக அடித்து அசத்தியிருந்தார். பஞ்சாப் சார்பில் பந்துவீசி அவர்களின் ரபடா இரண்டு விக்கெட் கைப்பற்றி இருந்தார். Himachal Pradesh Earthquake: ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் நிலநடுக்கம்; கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி.! வைரல் வீடியோ உள்ளே.! 

மைதானத்தை கரகோசத்தில் ஆழ்த்திய சஷாங் சிங்: இதனையடுத்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணி, அதிரடியாக மற்றும் நிதானமாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. பஞ்சாப் அணியின் சார்பில் விளையாடியவர்களில் சஷாங் சிங் 29 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து அசத்தியிருந்தார். அஸ்குதோஸ் ஷர்மா 17 பந்துகளில் 31 ரன்கள் அடித்திருந்தார். மொத்தமாக பஞ்சாப் அணி 19.5 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்து வெற்றி அடைந்தது. குஜராத் அணியின் சார்பில் பந்து வீசியவர்களில் நூர் அகமத் இரண்டு விக்கெட் கைப்பற்றினார். ஒமர்சாய், உமேஷ் யாதவ், ரஷீத் கான், மோஹித் சர்மா, தர்ஷன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர். ஆட்டநாயகனாக பஞ்சாப் அணியின் சார்பில் விளையாடிய சஷாங் சிங் தேர்வு செய்யப்பட்டார். இன்று மாலை 07:30 மணியளவில், ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி கிரிக்கெட் மைதானத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையேயான ஆட்டம் நடைபெறுகிறது.

இளம் நாயகர்கள் சஷாங் சிங் & அஷுதோஷ் சர்மா அதிரடி ஆட்டத்தால் வெற்றிகண்ட பஞ்சாப் கிங்ஸ்:

மைதானத்தை அதிரவைத்த சஷாங் ஆட்டம்: