Women Loss Job after Eating Sandwich: மீதமிருந்த உணவை சாப்பிட்ட துப்புரவு பணியாளர் பணிநீக்கம்; நிறுவனத்தின் கறார் செயலால் போர்க்கொடி.!
தற்போது பெண் ஒருவரின் பணிநீக்கம் தொடர்பான விஷயம் தெரியவந்துள்ளது.
பிப்ரவரி 21, இலண்டன் (World News): இங்கிலாந்து நாட்டில் உள்ள இலண்டன், ஃபின்ஸ்பரி சர்க்கஸ் பகுதியில் டென்ஷ்ரிஸ் சொலிஸிட்டர்ஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் புலம்பெயர் தொழிலாளியான ஈக்வடார் நாட்டை சேர்ந்த கேப்ரியல்லா ரோட்ரிகுயஸ் பெண் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் அந்நிறுவனத்தில் வேலை பார்த்து இருக்கிறார்.
சாண்ட்விச்சை சாப்பிட்ட பெண்: அச்சமயம் அலுவலக ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்டவர்களுக்கு சாண்ட்விச் வழங்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் சாண்ட்விட்ச்-ஐ சாப்பிட்டுவிட்டு, மீதமுள்ளதை அங்கேயே இருக்கையில் விட்டு சென்றுள்ளனர். துப்புரவு பணியாளராக கேப்ரியல்லா, அவ்வாறாக மீதம் இருந்த ஒரு சாண்ட்விச்சை எடுத்து சாப்பிட்டு இருக்கிறார். இது அங்கிருந்த கேமிராவில் பதிவாகி இருக்கிறது. Birds Dies by Freezing: நொடியில் மாறிய சீதோஷ்ணநிலை; உறைகுளிரில் இருந்து தப்பிக்க வழியின்றி பறவைகள் கொத்துக்கொத்தாக மரணம்.!
சட்டப்போராட்டம்: சம்பவம் நடந்த ஒரு வார காலத்திற்கு பின்னர் கேப்ரியல்லாவை அழைத்த நிர்வாகத்தினர், அவரின் செயலை குற்றச்சாட்டாக முன்வைத்து பணிநீக்கம் செய்வதாக கூறி வீட்டிற்கு அனுப்பி இருக்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட பெண்மணி நிறுவனத்தில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், தற்போது அவர் அங்குள்ள உள்ளூர் தொழிற்சங்கம் மற்றும் பிற அமைப்புகள் வாயிலாக சட்டப்போராட்டத்தை கையில் எடுத்து இருக்கிறார்.
கண்டிக்கத்தக்க செயல்: அவருக்கு ஆதரவாக செயல்பட்ட அமைப்பாளர்கள், கடந்த சில நாட்களுக்கு முன்பு தூய்மை பணியாளர் போல வேடமிட்டு, சாண்விச்சுடன் நிறுவனத்திற்கு முன்பு திரண்டு நூதன போராட்டத்தையும் முன்னெடுத்தனர். இதனால் இவ்விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், மனிதாபிமான அடிப்படையில் நடக்காமல் மீதமுள்ள உணவை சாப்பிட்ட துப்புரவு பணியாளரை பணிநீக்கம் செய்வது கண்டிக்கத்தக்கது என போர்க்கொடி தூக்கப்பட்டுள்ளது. பெண் சாப்பிட்ட சாண்ட்விச்சின் மதிப்பு இந்திய ரூபாயில் ரூ.136 என்பது குறிப்பிடத்தக்கது.