Sulawesi Floods: இந்தோனேஷியாவில் கொட்டித்தீர்த்த கனமழை; கடும் வெள்ளத்தில் சிக்கிய சுலாவெசி தீவு.. 14 பேர் பலி.!
தீவுக்கூட்டங்களின் ஒருங்கிணைப்பான இந்தோனேஷியாவில் இயற்கை பேரிடர்கள் அடுத்தடுத்து ஏற்படுவது அப்பகுதி மக்களின் வாழ்விடங்களை இயற்கை பறிக்கும் சூழலை நேரடியாக உண்டாக்குகிறது.
மே 04, சுலாவெசி (World News): ஆசியா, தெற்காசிய நாடுகளில் தற்போது கோடைகாலமானது உச்சத்தில் இருக்கிறது. இதனால் இந்தியா, சீனா, இந்தோனேஷியா, பாகிஸ்தான், மியான்மர் உட்பட பல நாடுகளில் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவு 40 டிகிரியை கடந்து வெப்பம் பதிவாகி வருவதால் மக்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். ஒருசில இடங்களில் திடீர் கோடை மழையும் பெய்கிறது. Snake Captured by Sarpmitra: கழிவறைக்கு சென்ற குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி; எட்டிப்பார்த்த பாம்பு, அசால்ட் சம்பவம் செய்த பெண்.!
திடீரென கொட்டித்தீர்த்த பேய் மழை: அந்த வகையில், இந்தோனேஷியா நாட்டில் கடந்த சில வாரங்களாகவே கடுமையான வெப்பம் மக்களை வாட்டி வதைத்து வந்தது. மே முதல் செப்டம்பர் மாதம் வரை அங்கு வறண்ட வானிலை நிலவும் காலம் ஆகும். இந்நிலையில், தற்போது திடீரென ஏற்பட்ட மழை காரணமாக, அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இந்தோனேஷியா நாட்டில் உள்ள சுலாவெசி (Sulawesi Island Flood), லுவுக் நகரில் சாலைகள் பலவும் வெள்ளநீரில் தேங்கி ஆறு போல காட்சி அளிக்கிறது. தண்ணீரும் அங்குள்ள ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடுவதால், வெள்ளம் ஊருக்குள் புகுந்துள்ளது. 6 College Students Died: பள்ளத்தில் உருண்டு பயங்கர விபத்தில் சிக்கிய கார்; கல்லூரி மாணவர்கள் 6 பேர் பரிதாப பலி.!
நிலச்சரிவு & வெள்ளத்தால் உயிர்பலி: சுலாவெசி தீவுப்பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக, குடியிருப்புகள் மற்றும் சாலைகளில் 10 அடி அளவில் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. உயிருடன் இருக்கும் மக்கள் வீடுகளின் கூரைகளில் ஏறி அமர்ந்தவாறு மீட்பு படைக்காக காத்திருக்கின்றனர். மொத்தமாக சுலாவெசி தீவில் தற்போது வரை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 20 பேர் வரை உயிரிழந்து இருக்கலாம் என தகவல் கிடைத்துள்ளது. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி 14 பேர் உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெள்ளத்தின் பிடியில் சிக்கியுள்ள சுலாவெசி தீவு: