Dehradun Accident (Photo Credit: @SachinGuptaUP X)

மே 03, டெஹ்ராடூன் (Uttarakhand News): உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டெஹ்ராடூன், ஐஎம்எஸ் கல்லூரியில் படித்து வரும் 7 கல்லூரி மாணவர்கள் (4 ஆண்கள், 3 பெண்கள்) குழு, அங்குள்ள முசௌரி நகருக்கு சுற்றுலா சென்றுள்ளது. பின் இவர்கள் டெஹ்ராடூன் நோக்கி காரில் பயணம் செய்துகொண்டு இருந்தனர். இந்நிலையில், இவர்களின் வாகனம் டெஹ்ராடூன் நோக்கி பயணிக்கும்போது, சுனகல் (Chunakhal) பகுதியில் வந்தபோது விபத்தில் சிக்கி இருக்கிறது.

6 கல்லூரி மாணவர்கள் பரிதாப பலி: விபத்தில் சிக்கிய வாகனம், பள்ளத்தாக்கில் தலைகுப்பற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் வாகனத்தில் பயணம் செய்த 7 பேரில், 4 ஆண்கள் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பெண்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தனர். ஒரு பெண்மணி மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். Minor Girl Sexual Abuse: குடோனில் 14 வயது சிறுமியை சீரழித்த காதலன்; வீடியோ எடுத்து மிரட்டிய நபர்.! அதிர்ச்சி சம்பவம்.! 

உடல்கள் அடையாளம் காணும் பணி தீவிரம்: இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர், விபத்தில் பலியான மாணவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் அடையாளம் காணப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆபத்தான மலைவழிப் பயணம் குறித்து சுருக்கமாக: உத்தரகாண்ட் மாநிலத்தை பொறுத்தமட்டில் அது மலைத்தொடர்கள் மீது பல ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள காரணத்தால், மலைப்பாங்கான சாலை வழியே பயணம் செய்ய வேண்டும். டெஹ்ராடூன் நகரம் 2100 (700 மீட்டர்) அடி உயரத்தில் இருக்கிறது. இந்த பயணத்தின்போது அதீத கவனம், வாகனத்தின் செயல்திறன் போன்றவை முக்கியம். ஒரு நொடி தாமதமான அலட்சிய செயல்பாடு மற்றும் வாகனத்தின் குறை கொத்துக்கொத்தாக உயிர்களை காவு வாங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.