Lightning Strike Youth Died: மைதானத்தில் நண்பர்கள் கண்முன்னே நடந்த கொடூரம்; கால்பந்து விளையாடியவர் மின்னல் தாக்கி பலி.. பதறவைக்கும் காட்சிகள்.!
திடீரென மைதானத்தில் வானிலை மாறி நடந்த மின்னல் தாக்குதலால் இளைஞரின் உயிர் பறிபோனது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
பிப்ரவரி 12, ஜகர்தா (World News): அழகிய கடற்கரைகள், ஆபத்தான எரிமலைகள், பச்சைபசேலென கணவரும் இயற்கை என தன்னகத்தே அழகு மற்றும் ஆபத்தைக் கொண்ட நாடு இந்தோனேசியா (Indonesia). அந்த நாட்டில் உள்ள சுற்றுலா மையங்களுக்கு உலகளாவிய சுற்றுலா பயணிகள் திரளாக செல்வது வழக்கம்.
இளைஞரை தாக்கிய மின்னல்: இந்நிலையில், இந்தோனேசியாவில் உள்ள மேற்கு ஜாவா, சில்வாங்கி, பண்டுவான் பகுதியில் கடந்த சனிக்கிழமை அங்குள்ள சுபான் பகுதியைச் சேர்ந்த இளைஞர் தனது நண்பர்களுடன் கால்பந்தாட்டம் விளையாடிக் கொண்டிருந்தார். அச்சமயம் எதிர்பாராத விதமாக திடீரென மின்னல் (Lightning Attack Death) ஒன்று அவரை தாக்கி இருக்கிறது. SpiceJet Layoff: 1400 பணியாளர்களை வீட்டிற்கு அனுப்பியது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்; அதிர்ச்சி தந்த பணிநீக்கம்.!
மைதானத்திலேயே பலியான உயிர்: இதனால் நிலைகுலைந்துபோனவர், நிகழ்விடத்திலேயே மயங்கி விழுந்தார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சக நண்பர்கள், உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரின் உயிரிழப்பை உறுதி செய்தனர்.
அதிர்ச்சிதரும் காட்சிகள்: திடீரென மாறிய வானிலை காரணமாக மின்னல் தாக்குதல் நடந்து இளைஞர் பலியானது அவரது நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த அதிர்ச்சிதரும் சம்பவத்தின் பதைபதைப்பு வீடியோ காட்சிகளும் உள்ளூர் மக்களால் பதிவு செய்யப்பட்டு சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.